ஆப்நகரம்

தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் சிலுவைப் பாதை வழிபாடு!

புனித வெள்ளியை முன்னிட்டு தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் நடைபெற்ற சிலுவைப் பாதை வழிபாட்டில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Samayam Tamil 19 Apr 2019, 4:55 pm
புனித வெள்ளியை முன்னிட்டு தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில்நடைபெற்ற சிலுவைப் பாதை வழிபாட்டில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
Samayam Tamil good friday


இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயர்நீத்த தினம் புனித வெள்ளியாக இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி பகுதியில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் இன்று காலை முதல் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. கத்தோலிக்க தேவாலயங்களில் சிலுவைப் பாதை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தூத்துக்குடியில் பழமை வாய்ந்ததூய பனிமய மாதா பேராலயத்தில் இயேசு சிலுவையை சுமப்பது போன்ற திருச்சொரூபம் பவனியாக ஆலயத்தை சுற்றி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அதை தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்