ஆப்நகரம்

தை பொங்கல் 2022 : மகர சங்கராந்தி கொண்டாடுவதன் ஆன்மிக அறிவியல் காரணம் தெரியுமா?

மகர சங்கராந்தி என்ற பெயரில் நாடு முழுவதும் கொண்டாடப்படும் தை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதன் பின்னால் இருக்கும் ஆன்மிகம் மற்றும் அறிவியல் காரணங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

Samayam Tamil 23 Nov 2022, 7:45 pm
நவகிரகங்களின் தலைவனான சூரிய பகவான் மகர ராசியில் சஞ்சரிக்கக்கூடிய முதல் நாளை தமிழகத்தில் தை பொங்கலாகவும், ஏனைய மாநிலங்களில் மகர சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
Samayam Tamil Pongal Festival
Pongal Festival

சூரியன் இந்த நாளில் சரியாக தென் கிழக்கில் உதிக்கக்கூடிய காலமாகும்.

அறுவடை நாளாக மக்களிடத்தில் பொருளாதார நிலை உயர்த்தக் கூடிய நாளாக இந்த நாள் திகழ்வதால் விவசாயிகள், வியாபாரிகள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.


மோட்சம் கிடைக்கும்!
சூரியன் உதிப்பதை வைத்து உத்தராயணம், தட்சிணாயனம் என இரண்டாகப் பிரிக்கின்றனர். சித்திரை 1, ஐப்பசி 1 ஆகிய தேதிகள் சூரியன் சரியாக கிழக்கில் உதிக்கும்.
சித்திரையிலிருந்து புரட்டாசி வரை உத்தராயணம் என்றும். ஐப்பசி 1 முதல் மார்கழி வரை தட்சிணாயனம் காலம் ஆகும்.

சூரியன் தென் கிழக்கிலிருந்து வட கிழக்கு நோக்கி நகரத்தொடங்கக் கூடிய காலம் உத்தராயணம் தொடங்கும் நாள் தான் தை 1. இந்த நாளில் ஒருவர் தன் உயிரை துரக்கும் போது மோட்சத்தை அடைவதாக புராணங்கள் கூறுகின்றன.

ஏன் தை பொங்கல் கொண்டாடப்படுகிறது? வரலாற்று முக்கியத்துவம் என்ன?

காயத்துடன் காத்திருந்த பீஷ்மா பிதாமா:
மகாபாரத போரில் உடல் முழுவதும் அம்புகளால் துளைக்கப்பட்ட பீஷ்ம பிதாமகர் மோட்சம் அடைய வேண்டும் என்ற நோக்கில் ரத சப்தமியான மகர சங்கராந்தி வரக்கூடிய நாளில் உயிரை விட்டு சொர்க்கத்தை அடைந்ததாகக் கூறப்படுகிறது.எனவே மக்கள் இந்த புனித நாளை மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடுகிறார்கள்.


தை பொங்கல் நடைமுறை மற்றும் அறிவியல் காரணங்கள்
நம் முன்னோர்கள் கடைப்பிடித்த பல்வேறு ஆன்மிக சடங்குகளின் பின்னால் பல்வேறு அறிவியல் காரணங்கள் இருக்கின்றன. அந்த வகையில் உத்தராயணம் தொடங்கக்கூடிய இந்த நாளில் குளிர் காலம் நிறைவடைகிறது.

மரகத லிங்கத்தின் சிறப்புகள் என்ன? : தமிழகத்தில் மரகத லிங்கம் உள்ள கோயில்கள் விபரம்

இந்தியா ஒரு விவசாய நாடு, பண்டிகைகளின் திருவிழா விவசாயத்தை பெரிதும் நம்பியுள்ளது. விவசாயிகள் கரிப் பயிர்கள், பணப் பயிர், மக்காச்சோளம், கரும்பு, வேர்க்கடலை ஆகியவற்றை விளைவித்து அறுவடை செய்து தங்கள் வீடுகளுக்கு கொண்டு வரக்கூடிய நேரத்தில் வரக்கூடியது தான் மகர சங்கராந்தி. விவசாயிகளின் வீடுகளில் உணவு நிரம்பி இருக்கக்கூடிய மகிழ்ச்சியான நாளில் தான் தை 1 பொங்கல் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்