ஆப்நகரம்

கோலாகலமாக நடந்த கோவை பட்டீசுவரர் தேர் திருவிழா

கோவை பேருர் பட்டீசுவரர் திருக்கோவில் திருத்தேரோட்ட திருவிழா 1000 க்கனக்கான பக்தர்கள் மற்றும் பட்டக்காரர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

Samayam Tamil 18 Mar 2019, 7:37 pm
கோவை பேருர் பட்டீசுவரர் திருக்கோவில் திருத்தேரோட்ட திருவிழா 1000 க்கனக்கான பக்தர்கள் மற்றும் பட்டக்காரர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
Samayam Tamil perur patteeswarar swamy aalyam car festival


கோவை அருள்மிகு பேருர் பட்டீசுவரர் திருக்கோவிலின் தேரோட்டம் இன்று நடைபெற்றது.
பங்குனி உத்திரத் திருவிழா 10 நாட்கள் நடைபெறும் இதனையொட்டி இன்று திருத்தேரோட்டத்தை மாதம்பட்டி சிவக்குமார் குடும்பத்தார் வடம்பிடித்து துவக்கி வைத்தனர்.
மேலும் பட்டக்காரர்கள், பக்தர்கள், பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டடோர் வடம்பிடித்து தேரை இழுத்து கோவிலை வலம் வந்தனர்.பிரம்மன்,விஷ்ணு, ஆதிமூர்க்கம்மன்,காலவமுனிவர் ஆகியோர்களுக்கு ஆனந்த நடனம் தரிசனம் கொடுத்த பங்குனி உத்திரத் திருநாள் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பெருவிழாவாக இக்கோவிலில் கொண்டாடப்படுகிறது.

மேலும் இக்கோவிலில் இரண்டு தேர்கள் உள்ளன. முதலில் பட்டீசுவரசுவாமி திருக்கோவில் தேரை வடம்பிடித்து கோவில் வலம்வந்துவிட்டு பிறகு இரண்டாவது பச்சைநாயகி அம்மன் தேரை பக்தர்கள் வடம்பிடித்து செல்வார்கள் இது இக்கோவிலின் ஜவிகம் ஆகும். மேலும் இந்நிகழ்ச்சியில் ஏராளமான பட்டக்காரர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானனோர் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டு சென்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்