ஆப்நகரம்

குழந்தை வரம் அருளும் கிருஷ்ண ஜெயந்தி விரதமுறையும்: பலன்களும்!

மஹாவிஷ்ணு, கிருஷ்ணாவதாரம் எடுத்த தினமே கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

Samayam Tamil 1 Sep 2018, 5:52 pm
மஹாவிஷ்ணு, கிருஷ்ணாவதாரம் எடுத்த தினமே கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. கண்ணன் பிறந்த ஆவணி மாத ரோகிணி நட்சத்திரம், மற்றும் பிறந்த திதியான அஷ்டமியைக் கணக்கிட்டு இவ்விழா அனுசரிக்கப்படுகிறது.
Samayam Tamil kri
குழந்தை வரம் அருளும் கிருஷ்ண ஜெயந்தி விரதமுறையும்: பலன்களும்!


அந்தவகையில் கிருஷ்ண ஜெயந்தி விழா, நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், கிருஷ்ண ஜெயந்தி விரத முறையும் அதன் பலன்களையும் குறித்து இப்போது பார்க்கலாம்.

கிருஷ்ண ஜெயந்தி விரத முறை!

பகவான் கிருஷ்ணர் குழந்தை அவதாரமாக நம் வீட்டுக்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமி பண்டிகையின் முக்கிய அம்சம். அதனால் கிருஷ்ண ஜெயந்தியன்று வீட்டை கழுவி சுத்தம் செய்து, அரிசி மாவால் கோலமிட்டு, மாவிலை தோரணங்களால் அழகுபடுத்த வேண்டும். பின்னர் வாசலில் தொடங்கி பூஜை அறை வரை, சின்னக்கண்ணன் நடந்து வருவது போல், அவனது பாதச்சுவடுகளை அரிசி மாவால் பதிக்க வேண்டும்.

குழந்தை வரம் அருளும் கிருஷ்ண ஜெயந்தி விரதமுறையும்: பலன்களும்!


கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார். இதனால், கிருஷ்ண ஜெயந்தியன்று பால், தயிர், வெண்ணெய், அவல், பழங்கள் மற்றும் வெண்ணெய் சர்க்கரை கலந்த நவநீதம் என்னும் கலவையை நிவேதனமாகப் படைக்க வேண்டும். வெல்லச்சீடை, உப்பு சீடை, முறுக்கு, லட்டு, மைசூர்பாகு, தேன்குழல், மனோகரம், திரட்டுப்பால், பர்பி போன்றவற்றையும் படைக்கலாம்.

குழந்தை வரம் அருளும் கிருஷ்ண ஜெயந்தி விரதமுறையும்: பலன்களும்!


திருமணமாகி நீண்ட காலமாகியும் குழந்தை இல்லாதவர்கள், கிருஷ்ண ஜெயந்தி அன்று விரதம் மேற்கொள்வது சிறப்பு. தம்பதியர் காலையில் நீராடி விரதத்தை தொடங்க வேண்டும். கணவன், மனைவி இருவரும் தம்பதி சகிதமாகவே விரதம் இருக்க வேண்டும். பகலில் விரதம் இருக்க வேண்டும். இரவில் ஸ்ரீ கிருஷ்ணரை பூஜித்து கண் விழித்து இருந்து அவரது வரலாறை கேட்க வேண்டும்.

மறுநாள் கிருஷ்ணருக்கு மீண்டும் பூஜைகள் செய்து வழிபாடுகள் நடத்தி அன்னதானம் செய்ய வேண்டும். அதன்பிறகு விரதத்தை பூர்த்தி செய்வது மிகவும் சிறந்தது.

குழந்தை வரம் அருளும் கிருஷ்ண ஜெயந்தி விரதமுறையும்: பலன்களும்!


விரத பலன்!

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், புதுமண தம்பதியர், கருவுற்றிருக்கும் தாய்மார்கள் தங்களுக்கு புக்தி, யுக்தி, அறிவு, ஆற்றல், ஆயுள், ஆரோக்யம் மிக்க புத்திர பாக்கியத்தை அருள வேண்டும் என்று அந்த ஆலிலைக் கண்ணனிடம் மனமுருகி பிரார்த்தனை செய்தால், ஜாதகத்தில் உள்ள புத்திர தோஷம், புத்திர தடை போன்றவை நிவர்த்தியாகி புத்திர பாக்ய யோகம் கிடைக்கும் என்பது பலங்காலம் தொட்ட நம்பிக்கை.

கிருஷ்ண ஜெயந்தி தொடர்பான மேலும் செய்திகளுக்கு...

கிருஷ்ணர் ஜெயந்தி வரலாறும், கொண்டாட்டங்களும்!!

Krishna Jayanthi Songs: கிருஷ்ண ஜெயந்தி சிறப்புப் பாடல்கள்!!

கிருஷ்ண ஜெயந்தி திருநாளைக் கொண்டாடும் வாழ்த்துச் செய்திகள்!!

பகவத் கீதை போதித்த கடமையின் சிறப்பை உணர்வோம்! முதல்வரின் கிருஷ்ண ஜெயந்தி வாழத்து

பகவான் கிருஷ்ணானுக்கு பிடித்த உப்பு சீடை: நீங்களும் எளிதில் செய்யலாம்!

கோகுலாஷ்டமி ஸ்பெஷல்: தட்டை செய்முறை

அடுத்த செய்தி

டிரெண்டிங்