ஆப்நகரம்

Happy Puthandu 2021: பிலவ வருட தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

சமயம் தமிழ், வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Samayam Tamil 13 Apr 2021, 10:14 pm
சமயம் தமிழ், வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
Samayam Tamil tamil puthandu


சமயம் தமிழ், வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும் நோய் இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும் கொடுக்கும் பிலவ தமிழ் வருடப்பிறப்பு.

இந்த பிலவ வருடம் சிசிர ருதுவுடன் உத்திராயண புண்ணிய காலம் நிறைந்த செவ்வாய் கிழமை (13 ஜனவரி 2021) நள்ளிரவு 1.48 மணிக்கு சுக்கில பட்ச துவிதியை திதியில், மேஷ ராசியில் உள்ள பரணி நட்சத்திரத்தில் தொடங்குகிறது.


சித்திரை மாதம் பிறந்ததுமே தமிழகத்தில் இளவேனில்காலம்' என்னும் வசந்த காலம் தொடங்குகிறது. மனித வாழ்க்கை இனிப்பும், கசப்பும் கலந்தே இருக்கும் என்பதை எடுத்துக் காட்டுவதைப் போல, தமிழகத்தில் வசந்த காலத்தில் மாமரங்களில் மாந்தளிர்களும், மலர்களும் பூத்துக் குலுங்கும்.


ஆண்டின் முதல் நாளில், வீட்டை நன்றாக கூட்டி தூய்மை செய்ய வேண்டும். கோலமிட்டு அழகுபடுத்த வேண்டும். வாயிற்படிகளுக்கு மஞ்சள் குங்குமம் இட்டு, மாவிலைத் தோரணங்களை கட்டி மங்கலம் சேர்க்க வேண்டும். வாயிற்படி நிலைவாயிலில் மஞ்சள் பூசி, மெழுகி, கோலமிட்டால் திருமகள் வாசம் செய்வாள் என்பது நம்பிக்கையாகும். மஞ்சள், குங்குமம் ஆகிய இரண்டு நோய்க்கிருமிகளும் துஷ்ட தேவதைகளும் வாசல்படியை தாண்டி வராமல் தடுக்கும் சக்திகளாகும்.


தமிழ் புத்தாண்டு நாளன்று மதிய உணவில் வேப்பம்பூ பச்சடி, மாங்காய்ப் பச்சடி, பருப்பு வடை, நீர்மோர், பருப்பு, பாயாசம், மசால்வடை போன்றன இடம் பெறும். இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு என அறுசுவை கொண்ட உணவுகளை சமைத்து உண்பர். அன்று சமையலில் வேப்பம்பூ பச்சடியும், மாங்காய் பச்சடியும் செய்யப்பட்டிருக்கும்.



வேப்பம் பூ கசக்கும் என்றாலும் மனித உடலிலுள்ள ரத்தத்தை தூய்மை செய்வதில் வேப்பம் பூவுக்கு நிகராக வேறு எந்த மூலிகையும் இல்லை.தமிழ் புது வருட உணவை விருந்தினருடன் உண்டு மகிழ்ந்தால் அந்த ஆண்டு முழுவதுமே குதூகலமாக இருக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்