ஆப்நகரம்

இன்று முதல் 4 நாட்கள் 144 தடை - தூத்துக்குடியில் களைகட்டும் வீரசக்கதேவி திருவிழா!

வீரசக்கதேவி திருவிழாவை ஒட்டி, தூத்துக்குடியில் 4 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 9 May 2019, 7:03 pm
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே பாஞ்சாலக்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வக் கோவில் உள்ளது. அங்கு வீரசக்கதேவி என்ற அம்மன் இருக்கிறார். இவருக்கு ஆண்டுதோறும் மே மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
Samayam Tamil Tuticorin


நடப்பாண்டில் வரும் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் விழா நடைபெறவுள்ளது. இது 63ஆம் ஆண்டு வீரசக்கதேவி விழா என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக பல்வேறு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

பாதுகாப்பு விஷயங்கள் தொடர்பாக மாவட்ட எஸ்.பி, காவல்துறை அதிகாரிகள் உடன் ஆலோசனை நடத்தினார். திருவிழா காலத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க, ஆட்சியர் சந்தீப் நந்தூரி 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது இன்று மாலை 6 மணி முதல் வரும் 12ஆம் தேதி காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளியூர் மக்களை அழைத்து வர, அன்னதானம் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பள்ளி, கல்லூரி வாகனங்கள், அரசு வாகனங்கள், தினசரி வாகனங்களுக்கு மேற்கூறிய உத்தரவு பொருந்தாது எனக் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்