ஆப்நகரம்

400 ஆண்டுகள் பழமையான கோயிலை நகர்த்தும் பணி தொடக்கம்!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் 400 ஆண்டுகள் பழமையான அம்மன் கோயிலை 5 அடி உயர்த்தி, 15 அடி தூரம் நகர்த்தும் பணி நேற்று தொடங்கியது.

Samayam Tamil 15 Sep 2018, 11:49 am
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் 400 ஆண்டுகள் பழமையான அம்மன் கோயிலை 5 அடி உயர்த்தி, 15 அடி தூரம் நகர்த்தும் பணி நேற்று தொடங்கியது.
Samayam Tamil temple run
400 ஆண்டுகள் பழமையான கோயிலை நகர்த்தும் பணி தொடக்கம்


வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாழையாத்தம் பஜார் பகுதியில் சுமார் 400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பருவதராஜகுல மரபினருக்குச் சொந்தமான அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மயானக்கொள்ளை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

தற்போது கோயில் அமைந்துள்ள பகுதியில், சாலை செப்பனிடும் பணி நடந்ததால், கோயில் சாலையை விட கீழாக சென்றுவிட்டது. இதனால் மழைக் காலங்களில் கோயிலில் நீர் தேங்கி, பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வந்தனர்.

இந்நிலையில் கோயிலை இடிக்க விரும்பாத பக்தர்கள், நவீன தொழில்நுட்ப உதவியுடன் கோயிலை நகர்த்த முடிவு செய்து, ஹரியாணா மாநிலத்தை சேர்ந்த கட்டிட இடமாற்றம் செய்யும் குழுவிடம் பணியை ஒப்படைத்தனர்.

கோயில் ராஜகோபுரத்தில் உள்ள சிலைகள் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளதால், கோயிலுக்கும், கோபுரத்துக்கும் சேதம் ஏற்படாமல் கோயிலை பின்புறம் 15 அடி நகர்த்தவும், 5 அடி உயர்த்தவும் தீர்மானிக்கப்பட்டது.

இதற்காக கோயில் கட்டடத்தின் கீழ் சிறிது, சிறிதாக பள்ளம் தோண்டி, 500-க்கும் மேற்பட்ட ஜாக்கிகளை பொருத்தி, கோயில் கட்டடத்தின் அடிப்பகுதியில் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது.

இதையடுத்து கோயிலை பின்புறம் நகர்த்தும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. 150 பளு தூக்கிகள் மூலம் கோவிலை 13 அடி உயரத்திற்கு பின்புறமாக நகர்த்தி5 அடிக்கும் மேலாக உயர்த்தும் பணி நடைபெற்று வருகிறது. நாள் ஒன்றுக்கு 1 அடி வீதம் 7 நாட்களுக்கு 7 அடிக்கு கோயிலை பின்நோக்கி நகர்த்த திட்டமிட்டுள்ளனர்.

ஆகம விதிப்படி, கோயிலை புனரமைத்து, வரும் கார்த்திகையில் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. இதற்காக, 40 லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் நடந்து வருவதாக, கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்

அடுத்த செய்தி

டிரெண்டிங்