ஆப்நகரம்

Athi Varadar: அத்தி வரதரை வழிபடவும் ஆதார் அவசியம்!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அத்தி வரதர் தரிசனம் இன்று இனிதே தொடங்கியது. 48 நாட்கள் தரிசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், சுவாமியை தரிசிக்க ஆதார் அட்டை அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 1 Jul 2019, 6:23 pm
பக்தர்களின் பெரிய எதிர்பார்ப்பாக இருந்த 40 வருடங்களுக்கு ஒரு முறை காணக் கிடைக்கும் அத்தி வரதரின் தரிசனம் இன்று முதல் தொடங்கி உள்ளது.
Samayam Tamil Athi Varadar Aadhaar Card


இந்நிலையில் அத்தி வரதரை தரிசிக்க செல்லும் உள்ளூர்வாசிகள் கட்டாயம் ஆதார் அட்டையை எடுத்து வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் தான் தற்போது உலகமே திரும்பிப் பார்க்கும் ஆன்மிகத் தலமாக மாறி உள்ளது.

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அந்த கோயில் திருக்குளத்தில் வைக்கப்பட்டிருக்கும் அத்தி வரத பெருமாள் ஜூன் 28ம் தேதி வெள்ளிக் கிழமை அதிகாலை வெளியே எடுக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து 48 நாட்கள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

ஸ்ரீ அத்திவரதரை தரிசனம்- ஆடை கட்டுப்பாடு, அர்ச்சனை டிக்கெட் வாங்கும் விபரம் வெளியீடு

தரிசனத்திற்கான வழிகாட்டுதல்:
40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அதிசய நிகழ்வாக இருப்பதால், சுவாமி தரிசனம் செய்ய ல்10 லட்சத்திற்கு அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு உள்ளூர், வெளியூர் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான தேதிகள், நேரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அத்தி வரத பெருமாளை ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து தரிசிக்கலாம்!
உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக ஒதுக்கப்பட்ட தேதிகள் (அனுமதி மாலை 5-8 மணி வரை)
1 ஜூலை முதல் 3 ஜூலை வரை
12 ஜூலை முதல் 24 ஜூலை வரை
5 ஆகஸ்ட் முதல் 12 ஆகஸ்ட் வரை
16 ஆகஸ்ட் முதல் 17 ஆகஸ்ட் வரை
குறிப்பு: உள்ளூர் மக்கள் தரிசனம் செய்வதற்கான தேதிகளில் மாலை 5 முதல் 8 மணி வரை மட்டுமே உள்ளூர் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். மற்ற நேரங்களில் வெளியூர் பக்தர்கள் தரிசிக்க முடியும்.

அத்தி வரதர் -ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் புராண வரலாறு
அதார் அவசியம்:
இந்நிலையில் உள்ளூர் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வரும் போது தான் உள்ளூர்வாசி தான் என்பதை தெரிந்து கொள்ளும் விதமாக அவர்கள் ஆதார் அட்டையை எடுத்து வந்து பதிவு செய்து பின்னர் சுவாமி தரிசனம் செய்யலாம் என கோயில் நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் வெளியூர்வாசிகளும் ஆதார் அட்டையை எடுத்துவருவது நல்லது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்