ஆப்நகரம்

ஆசியாவின் மிக உயர ஐயனார் குதிரைக்கு திருவிழா - 2,000 மாலையுடன் பிரமாண்ட வழிபாடு!

புதுக்கோட்டை அருகே குளமங்கலத்தில் ஆசியாவிலேயே மிக உயரமான 32 அடி குதிரை ஸ்ரீ பெருங்காரையடி மிண்ட ஐயனார் கோவில் குதிரை திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

Samayam Tamil 19 Feb 2019, 9:29 pm
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா குளமங்கலம் ஊராட்சியில் பிரசித்திப் பெற்ற ஸ்ரீ பெருங்காரையடி மிண்ட ஐயனார் கோவில் உள்ளது. இங்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய 32 அடி உயரமான குதிரை அமைந்துள்ளது.

இந்நிலையில் மிண்ட ஐயனார் கோவில் மாசிமக பெருந்திருவிழா தொடங்கியுள்ளது. திருக்கோவிலின் சிறப்பம்சமாக வேண்டுதலை நிறைவேற்றியதற்கு பிறகு தான், பொதுமக்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.

இந்நிலையில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் சிங்கப்பூர், மலேசியா ஆகிய வெளிநாடுகளில் இருந்தும் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.

இவர்கள் 32 அடி உயர குதிரைக்கு பெரிய மாலைகளை, வாகனங்களில் ஊர்வலமாக கொண்டுவந்து காணிக்கையாக செலுத்துகின்றனர். இதுவரை இரண்டு நாட்களாக 2,000க்கும் மேற்பட்ட மாலைகள் போடப்பட்டுள்ளன.

இந்த கோவிலுக்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்வதால், மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் கோரிக்கை வைத்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்