ஆப்நகரம்

Athi Varadar:அத்தி வரதர் மீண்டும் குளத்தில் வைக்கப்படுவாரா?- ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயருக்கு அமைச்சர் பதில்!

அத்தி வரத பெருமாள் 48 நாட்களுக்கு பிறகு மீண்டும் கோயிலில் உள்ள திருக்குளத்தில் மீண்டும் வைக்கப்படும் என அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 23 Jul 2019, 5:18 pm
அத்தி வரத பெருமாள் 48 நாட்களுக்குப் பிறகு மீண்டும் கோயிலில் உள்ள திருக்குளத்தில் அமிழ்த்தி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Sevvoor S Ramachandran


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை குளத்தில் வைக்கப்பட்டுள்ள அத்தி வரத பெருமாள் வெளியே எடுக்கப்பட்டு, 24 நாட்கள் சயன கோலத்திலும், 24 நாட்கள் நின்ற கோலத்தில் என மொத்தம் 48 நாட்கள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நடைமுறை பல காலமாக நடைபெற்று வருகின்றது.

கடந்த 1979ம் ஆண்டுக்குப் பின் 40 வருடங்களுக்கு பிறகு தற்போது ஜூலை 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு அருளி வருகிறார்.

அத்தி வரதர் நின்ற நிலை தரிசனம் தரும் தேதி மாற்றம்... எப்போது தெரியுமா?

ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் கோரிக்கை:
முன்பு சிலை சேதப்படுத்தப்படும் திருடப்படும் அபாயம் இருந்ததால் அத்தி வரதரைக் கோயில் குளத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்தார். அந்த வழக்கம் இப்போது வேண்டாம். அத்தி வரதர் கோயிலிலேயே வைத்துப் பூஜிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தி வரதரை வெளியே வைத்தால், திருப்பதி போன்று காஞ்சிபுரம் புகழடையும் என அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தார்.


அத்திவரதரை மீண்டும் குளத்திற்குள் புதைக்கக்கூடாது - ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோபராமானுஜ ஜீயர்


அமைச்சர் பதில்:
ஜீயரின் கோரிக்கைக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறுகையில், “அத்தி வரதர் வைபவம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரும் என மாவட்ட நிர்வாகம் சார்பாக பல சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

தற்போது அதை விட கூடுதலாகப் பக்தர்கள் வருவதால் அதை சமாளிக்கு உரிய கூடுதல் வசதிகள் செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார். என தெரிவித்தார்.

அத்தி வரதர் சிறப்பு தரிசன ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?

பூமிக்கடியில் வைப்பது குறித்து பேசும். “ஆகம விதியில் என்ன இருக்கின்றதோ, அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது” என தெரிவித்துள்ளார்.

கோயில் அறங்காவளர் ஸ்ரீஷா பேசும் போது, “கோயிலின் பழக்க வழக்கத்தை மாற்றக் கூடாது. அத்தி வரதரை பொருட்காட்சி ஆக்க நினைக்கக் கூடாது. ஆகம மரபுப்படி அவர் மீண்டும் குளத்தில் வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்