ஆப்நகரம்

திருப்பதியில் நவம்பர் 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!

திருப்பதியில் நவம்பர் 1ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தேவஸ்தானம் தடை விதிக்க உள்ளது.

Samayam Tamil 26 Oct 2018, 1:17 pm
திருப்பதியில் நவம்பர் 1ஆம் தேதிமுதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தேவஸ்தானம் தடை விதிக்க உள்ளது.
Samayam Tamil download


திருப்பதியில் கடந்த அக்டோபர்2ஆம் தேதிகாந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு நகராட்சி நிர்வாகம் தடை விதித்தது.

50 மைக்ரானுக்கும் கீழ் உள்ள பிளாஸ்டிக் கவர்கள், 2லிட்டருக்கும் குறைவான குடிநீர்பாடில்கள், தேனீர் அருந்த பயன்படுத்தபடும் பிளாஸ்டிக் கப்புகள்,பிளாஸ்டிக் பூச்சு கொண்ட பேப்பர் கப்புகள் உள்ளிட்டவற்றிற்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் திருமலையிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்குதடைவிதிப்பது குறித்து, திருப்பதி நகராட்சி அதிகாரிகள் தேவஸ்தான அதிகாரிகளுடன் கலந்துரையாடினர்.

இதைத்தொடர்ந்துநவம்பர் 1 ஆம் தேதி முதல் திருமலையிலும் பிளாஸ்டிக் பொருட்கள்பயன்படுத்த தேவஸ்தானம் தடைவிதித்துள்ளது.

சுற்றுசூழல் மாசுபாட்டைத் தவிர்ப்பதுடன், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும், புற்றுநோயைத் தடுக்கவும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் லட்டுகளை போட்டுத்தரும் கவருக்கு மாற்று ஏற்பாடு செய்யும் வரை லட்டு கவர்களை மட்டும் பயன்படுத்த தேவஸ்தானம் நகராட்சி அதிகாரிகளிடம் அனுமதி கோரியுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்