ஆப்நகரம்

அத்தி வரதர் தரிசிக்க ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது- எப்படி செய்வது தெரியுமா?

காஞ்சிபுரம் அருள்மிகு தேவராஜசுவாமி திருக்கோயில், பிரம்ம தேவர் உருவாக்கிய ஸ்ரீ வரதராஜப் பெருமாளை (அத்தி வரதர்) தரிசிக்க பக்தர்கள் அலைமோதுகின்றனர்.

Samayam Tamil 2 Jul 2019, 1:12 pm

நேற்று தொடங்கிய அத்தி வரத பெருமாளின் தரிசனத்தைப் பார்க்க கூட்டம் அலை மோதியது. முதல் நாள் மட்டும் சுமார் 1 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.
Samayam Tamil Athi varadar Booking


ஆன்லைன் முன்பதிவு:
உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்யும் பொருட்டும். கூட்டத்தை தவிர்க்கும் பொருட்டும் அரசு மற்றும் கோயில் நிர்வாகம் சார்பாக பல்வேறு முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அத்தி வரத பெருமாளை எப்போது தரிசிக்க முடியும்?- டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?

அந்த வகையில் பக்தர்களின் வசதிக்காகவும், கூட்டத்தை தவிர்க்க ஆன்லைன் மூலம் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை இந்து அறநிலையத்துறை ஏற்படுத்தி உள்ளது.

அத்தி வரதரை வழிபடவும் ஆதார் அவசியம்!

தொடங்கிய முன்பதிவு:
4ம் தேதி தரிசனம் செய்வதற்கு ஏற்ற வகையில் இன்று முதல் ஆன்லைன் முன்பதிவு செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைன் முன்பதி செய்ய

சிறப்பு தரிசன வரிசை இல்லை:
பக்தர்கள் பெருமாளை தரிசிக்க இலவச பொதுவழியும், ரூ.50 கட்டணத்துடன் கூடிய சிறப்பு தரிசன வரிசையும் உருவாக்கப்பட்டிருந்தது.

அத்தி வரதரை 12 ராசியினர் எப்படி வணங்க வேண்டும்?- என்ன வளம் பெறலாம்?

நேற்று ரூ. 50 கட்டண சிறப்பு தரிசன வரிசையில் கூட்டம் அலைமோதியதால், கூட்ட நெரிசலும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதனால் இன்று சிறப்பு தரிசன வரிசையை கோயில் நிர்வாகம் நிறுத்திவிட்டு, இலவச தரிசன வரிசையை மட்டும் விடபடுகின்றது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்