ஆப்நகரம்

சபரிமலை ஐயப்பனை மட்டுமல்ல, ஹரியானா முருகனை தரிசிக்கவும் பெண்களுக்கு அனுமதி இல்லை..!!

சபரிமலையில் மட்டுமல்ல, ஹரியானாவின் இந்த முருகன் கோயிலுக்குள்ளும் பெண்கள் செல்ல அனுமதி இல்லை.

Samayam Tamil 2 Dec 2018, 3:57 pm
தென்னிந்தியாவில் சபரிமலை போலவே, வட இந்திய மாநிலமான ஹரியானாவில் உள்ள முருகன் கோயிலுக்கு பெண்கள் யாரும் சென்று வழிபடுவது கிடையாது. இதுதொடர்பான செய்தியை பார்க்கலாம்.
Samayam Tamil HARYANA
ஹரியானா முருகன் கோயிலில் பின்பற்றப்படும் சபரிமலை நடைமுறை


சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கான எதிர்ப்பு குரல்கள் இன்னும் ஓயாத நிலையில், இதேபோன்றே ஒரு நடைமுறை ஹரியானாவில் உள்ள முருகன் கோயிலுக்கும் கடைப்பிடிக்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து கோயிலின் பூசாரி ஒருவர் கூறும்போது, சிவனின் மூத்த மகனாக விநாயகரும், இளைய மகனாக முருகனும் திகழ்வதாக இந்து மத நம்பிக்கையாக உள்ளது. ஒருமுறை கைலாயத்தில் ஈசனின் மனைவி பார்வதி தேவி உலகை சுற்றிவருபவருக்கு தான் ஞானப்பழம் கிடைக்கும் என்று கூறுகிறார்.

உடனே முருகன் மயிலில் ஏறி புறப்பட்டு விட, விநாயகர் தந்தை மற்றும் தாயை சுற்றிவந்து அவர்கள் தான் உலகம் என்பதை நிரூபித்து ஞானப்பழத்தை பெறுகிறார். இதனால் சீற்றமடையும் முருகன், ஆண்டிக்கோலம் பூண்டு இனிமேல் பெண்கள் என்னை யாரும் பார்க்க வரக்கூடாது.

அப்படி அவர்கள் வந்தால், அடுத்த ஏழு ஜென்மங்களுக்கு கணவன்களை இழந்து அப்பெண்கள் விதவையாகி விடுவார்கள் என சாபம் விடுத்து கையாலத்தை விட்டு வெளியேறி விடுகிறார். இதனால் தற்போது வரை இந்த கோயிலுக்குள் பெண்கள் யாரும் வருவது கிடையாது என அந்த கோயில் பூசாரி தெரிவித்தார்.

இந்த கோயிலுக்குள் முருகனின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள கர்ப்ப கிரஹத்திற்குள் பெண்கள் யாரும் வழிபாடு நடத்த வருவது கிடையாது. மேலும் இந்த கோயிலில் எரியும் இரண்டு விளக்குகள், மஹாபாரத காலத்தில் பாண்டவர்களில் ஒருவரான யுத்ராஷ்டரர் பற்ற வைத்ததாக இப்பகுதி மக்கள் தகவல் கூறுகின்றனர்.

இந்த முருகன் கோயிலுக்கு முன்பு, பெண்கள் உள்ளே நுழையவேண்டாம் என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. எனினும், முருகனை வழிபட பெண்கள் கோயிலுக்கு வந்தாலும், அவர்கள் யாரையும் கோயில் நிர்வாகிகள் தடுப்பது கிடையாது. இந்த விவகாரம் தொடர்பாக சமீபத்தில் ஹரியானா முதலமைச்சர் அலுவலக அதிகாரிகள் ஆய்வு நடத்தி சென்றதாக தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்