ஆப்நகரம்

மணி கட்டி வேண்டினால் நினைத்ததை நிறைவேற்றும் திருவனந்தபுரம் வெள்ளாயணி பத்திரகாளி ஆலயம்

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மணக்காடு தபால் நிலையம் எதிராக அமைந்துள்ளது வெள்ளாயணி பத்திரகாளி தேவி ஆலயம்.

Samayam Tamil 17 Mar 2019, 7:57 pm
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மணக்காடு தபால் நிலையம் எதிராக அமைந்துள்ளது வெள்ளாயணி பத்திரகாளி தேவி ஆலயம். பத்திரகாளி தேவி ஆலயமாக இருந்தாலும் கருணை கடலாக திகழும் புண்ணிய ஆலயமாகும்.
Samayam Tamil Vellayani Devi Temple


தன்னிடம் வேண்டி வரும் பெண்கள், குழந்தைகள் பக்தர்களுக்கு அருளை அள்ளித்தரும் தேவியாக இருக்கிறார்.

இங்கு மாங்கல்ய பாக்கியம், குழந்தை பாக்கியம் வேண்டி, தாம்பத்ய நலன், தொழில் அபிவிருத்தி, எதிரிகளின் தொல்லை, பகை உள்ளிட்ட பிரச்னைகளை நீக்க வேண்டி வரும் பகதர்கள் ஏராளம்.

பக்தர்களின் வேண்டுதலை வெகு விரைவாக நிறைவேற்றித் தருவதாக இங்கு வரும் பக்தகர்கள் பலர் தெரிவிக்கின்றனர்.

செவ்வாய், வெள்ளி, ஞாயிறு கிழமைகளில் இந்த ஆலயத்திற்கு ஏழு முறை வந்து மணி கட்டி வழிபட்டால் நினைத்ததை நிச்சயம் நிறைவேற்றி தரும் தேவியாக வெள்ளாயணி தேவி திகழ்கிறாள்.


இந்த ஆலையத்தில் கணபதி, துர்க்கா தேவி, நாகராஜன், நாக யட்சி, நாக கன்னி, தம்புரான், லட்சுமி நாராயண பிரதிட்டைகளும் உள்ளன.
பங்குனி மாததில் நடக்கும் ஆலய திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம்.

மேலும் விவரங்களுக்கு:
மணக்காடு வெள்ளாயணி பத்திரகாளி ஆலய டிரஸ்ட், தபால் நிலைய எதிர் புறம், திருவனந்தபுரம் 695009. தொலைபேசி: +917907066485

அடுத்த செய்தி

டிரெண்டிங்