ஆப்நகரம்

காஞ்சி சோமாஸ்கந்தர் சிலையை சரிசெய்யும் பணிகள் தொடக்கம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலிலுள்ள பழமையான சோமாஸ்கந்தர் சிலையை ஸ்தபதியைக் கொண்டு சரிசெய்யும் பணி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

Samayam Tamil 12 Mar 2019, 10:05 pm
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலிலுள்ள பழமையான சோமாஸ்கந்தர் சிலையை ஸ்தபதியைக் கொண்டு சரிசெய்யும் பணி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
Samayam Tamil kanchipura

புதிதாக செய்யப்பட்ட சோமாஸ்கந்தர் உற்சவர் சிலையில் தங்கம் கலப்பதில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்ததை அடுத்து அச்சிலையானது கும்பகோணம் நீதிமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது.

பழைய சிலையை வைத்து பங்குனி உத்திரத்தை நடத்த உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சிலையை கோயிலிலேயே சரிசெய்து, திருவிழாக்களின் போது பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதனையடுத்து ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் உத்தரவின் பேரில் கோவிலுக்கு வந்த சிலை கடத்தல் தடுப்பு போலீசார் முன்னிலையில் சிலையை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இரவுக்குள் சிலை சரிசெய்யும் பணிகள் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

12

அடுத்த செய்தி

டிரெண்டிங்