ஆப்நகரம்

எப்போது திறக்கப்படும் சபரிமலை கோவில்?-கோவில் நிர்வாகம் அறிவிப்பு!!

பம்பை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு இன்னும் குறையாததால், அடுத்த அறிவிப்பு வரும் வரை சபரிமலை ஐயப்பன் கோவில் மூடப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 23 Aug 2018, 4:20 pm
பம்பை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு இன்னும் குறையாததால், அடுத்த அறிவிப்பு வரும் வரை சபரிமலை ஐயப்பன் கோவில் மூடப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Samayam Tamil சபரிமலை கோவில் மீண்டும் எப்போது திறக்கப்படும்? கோவில் நிர்வாகம் அறிவிப்பு!!
சபரிமலை கோவில் மீண்டும் எப்போது திறக்கப்படும்? கோவில் நிர்வாகம் அறிவிப்பு!!


கேரளாவில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக, கேரளாவின் பெரும்பாலான இடங்களில் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் சிக்கி, இதுவரையில் 350 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மேலும், பல லட்சக்கணக்கானோர் தங்கள் வாழ்விடங்களை இழந்து தவித்து வருகின்றனர். தற்போது, மழை வெள்ளம் வடிந்து வரும் நிலையில், நிவாரணப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே, கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பிற்கு உதவும் விதமாக, பல மாநில அரசுகளும், அரசியல் கட்சிகளும், சினிமா பிரபலங்களும் தங்களால் முடிந்த நிதி உதவிகளை செய்து வருகின்றனர். அதிலும், மலையாள நடிகர்களைக் காட்டிலும், தமிழ் நடிகர்கள் அதிக அளவில் கேரளாவிற்கு உதவி வருகின்றனர்.

இந்நிலையில், வெள்ளப்பெருக்கின் காரணமாக கேரளாவில் பிரசித்திபெற்ற, சபரிமலை ஐயப்பன் கோவில் கடந்த 13 ஆம் தேதி மூடப்பட்டது. இதனைத்தொடர்ந்து, பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு இன்னும் குறையாததால், அடுத்த அறிவிப்பு வரும் வரை ஐயப்பன் கோவிலை மூட உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், வெள்ளப்பெருக்கால் கோவிலுக்கு சுமார் ரூ.100 கோடி அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்