ஆப்நகரம்

கொள்ளிடம் ஆற்றில் மீனவர் வலையில் சிக்கிய பழமையான சிவலிங்கம்... மக்கள் அதிசயம்

நாகை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் மீன்வர்களின் வலையில் சிக்கிய பழமை வாய்ந்த சிவலிங்கத்தை புதிய கோயில் கட்டி வழிபட திட்டமிட்டுள்ளனர்.

Samayam Tamil 18 Mar 2019, 11:41 am
நாகை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் மீன்வர்களின் வலையில் சிக்கிய பழமை வாய்ந்த சிவலிங்கத்தை புதிய கோயில் கட்டி வழிபட திட்டமிட்டுள்ளனர்.
Samayam Tamil Sivalingam


நாகை, கொள்ளிடம் ஆற்றங்கரைத் தெருவை சேர்ந்தவர் விஜி மற்றும் குமார். இவர்கள் நேற்று கொள்ளிடம் ஆற்றில் நாட்டுப் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் வீசிய வலையில் ஒரு கனமான பொருள் சிக்கியது. வலையை இழுக்க முடியாமல் தவித்த அவர்கள், ஒரு வழியாக சிரமப்பட்டு கரைக்கு இழுத்து வந்தனர். அப்போது வலையில் சிவலிங்கம் சிக்கியிருப்பது பார்த்து பரவசம் அடைந்தனர்.

இந்த சிவலிங்கம் 1000 ஆண்டு பழமையானது என கூறப்படுகிறது. சிவலிங்கம் கிடைத்ததால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ள அப்பகுதி மக்கள் தற்போது அங்குள்ள விநாயகர் கோயிலில் வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பிரபு என்பவர் பேசுகையில், “மீனவர் வலையில் சிவலிங்கம் சிக்கியிருப்பது மிகவும் பாகியமாக கிராமத்தினர் கருதுகின்றனர். இந்த சிவலிங்கம் 1000 ஆண்டு பழமையானதாக இருக்க வாய்ப்புள்ளது. கொள்ளிடம் கரையோரம் கோயிலில் வைக்கப்பட்டிருக்கலாம். வெள்ளத்தின் போது அடித்துச் செல்லப்பட்டு தற்போது கிடைத்திருக்கிறது என தெரிவித்துள்ளார்.

இந்த சிவ லிங்கத்திற்கு தனியாக கோயிலை கட்டி வழிபாடு செய்ய கிராமத்தினர் முடிவு செய்துள்ளனர்.” என தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்