ஆப்நகரம்

குலசை முத்தாரம்மன் கோயிலுக்கு ஆசியன் ரெக்கார்ட்ஸ் சான்றிதழ்!

உலக பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலுக்கு இந்தியன் மற்றும் ஆசியன் ரெக்கார்ட்ஸ் சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. தசரா திருவிழாவில் 15 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டதாகவும், அதில் 8 லட்சத்து ஐந்தாயிரம் பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து வந்துள்ளதாகவும் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 1 Jan 2019, 8:52 am
உலக பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலுக்கு இந்தியன் மற்றும் ஆசியன் ரெக்கார்ட்ஸ் சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.
Samayam Tamil cats


தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, பல்வேறு வேடங்களை அணிந்து, அம்மனை வழிபடுவார்கள்.

இந்நிலையில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலுக்கு, அதிக பக்தர்கள் வந்ததற்காக இந்தியன் மற்றும் ஆசியன் ரெக்கார்ட்ஸ் சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.

தசரா திருவிழாவில் 15 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டதாகவும், அதில் 8 லட்சத்து ஐந்தாயிரம் பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து வந்துள்ளதாகவும் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்