ஆப்நகரம்

குலச்சேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் சிறப்புகள்

மைசூருக்கு நிகராக, தூத்துக்குடியில் அமைந்துள்ள குலச்சேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயிலில் நவராத்திரி திருவிழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது.

Samayam Tamil 23 Sep 2019, 3:05 pm
முருகப்பெருமானின் மிகவும் பிரசித்தி பெற்ற தலங்களில் ஆறுபடை வீடுகளில் ஒன்றான அமைந்த கோயில் திருச்செந்தூர். அதன் அருகில் உள்ள ஊரில் அமைந்துள்ள கோயில் தான் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில்.
Samayam Tamil Mutharamman Temple


நவராத்திரி திருவிழா:
ஒவ்வொரு ஆண்டும் மைசூரில் நவராத்திரி திருவிழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதற்கடுத்தார் போல் மிகவும் பிரசித்தியாக நவராத்திரி விழாவை கொண்டாடும் இடமாக குலச்சேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் உள்ளது.

கோயில் அமைந்துள்ள இடம்:
திருச்செந்தூர் (திருச்சீரலைவாய்) நகரிலிருந்து கன்னியாகுமரி செல்லும் கடற்கரை சாலையில் தன் சகோதரிகளான அட்டகாளிகளுடன் 14 கிமீ தொலைவில் குலசேகரப்பட்டினத்தில் ஞானமூர்த்திஸ்வரருடன் அன்னை முத்தாரம்மன் ஆலயம் அமைந்துள்ளது.

அனைத்து நட்சத்திரங்களுக்கான குரு பெயர்ச்சி பலன்கள் (2019 - 2020)

கோயிலின் வரலாறு:
சுயம்பு மூர்த்தியாக சுவாமி அம்பாள் தோன்றியுள்ளனர். அதே சமயம் மைலாடி என்ற ஊரில் ஆசாரி ஒருவர் கனவில் தோன்றி தனக்கு ஒரு சிலை செய்யுமாறும், அதை குலசேகரத்திலிருந்து வரும் அர்ச்சகரிடம் கொடுத்து அனுப்பமாறு கூறினார்.

அதே போல அர்ச்சகரின் கனவில் மைலாடி ஊரில் ஒரு ஆசாரி எனக்கு ஒரு சிலை செய்துள்ளார், அதை வாங்கி வந்து, சுயம்பு சிலை அருகே வைத்து வழிபாடு செய் என கூறினார். அதன் படியே செய்யப்பட்டது. அம்பாள் திருமேனியை தனே தேர்வு செய்தது தான் இந்த கோயிலின் வரலாறாக உள்ளது.

கோயிலின் சிறப்புகள்:
25 வருடங்களுக்கு முன்னர் இந்த கோயில் உள்ளூர் மக்கள் வழிபடும் ஆலயமாக இருந்தது. இந்த ஊரில் உள்ள மக்களுக்கு அம்மை ஏற்பட்ட போது முத்தாரம்மனை வணங்கிய போது நோய் தீர்ந்ததாகவும், அவர்களின் கஷ்டங்கள் போக்கியதாகவும் கூறப்படுகின்றது.

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது தெரியுமா?

இந்த அம்மனின் புகழ் கொஞ்சம் கொஞ்சமாக பரவியது. அம்மன் கேட்ட வரத்தை இல்லை என கூறாமல் வாரி வழங்கி வருவதால், இவரின் புகழ் பக்கத்து கிராமத்திற்கு பரவியது, தொடர்ந்து பக்கத்து மாவட்டம், மாநிலம் என பரவிய நிலையில், தற்போது வேறு நாட்டுக்கு பரவியுள்ளது.

நேர்த்திக்கடன்:
இந்த கோயிலுக்கு வந்து தங்களின், நோய், கஷ்டங்கள் குணமடைந்தவர்கள் அதற்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் அவர்களின் ஊரில் ஐந்து அல்லது பத்து வீடுகளில் சென்று தர்மம் பெற்று அந்த காணிக்கையை இந்த கோயிலில் வந்து செலுத்தி தங்களின் நன்றியை செலுத்துவது நேர்த்திக்கடனாக பார்கப்படுகின்றது.

புரட்டாசி மாதம் சனிக்கிழமை விரதம் மற்றும் வழிபாடு முறை

அனைத்து வரங்களையும் அள்ளி அள்ளிக் அன்னை கொடுப்பதால் , தன்னைத்தேடி வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்த கோயிலுக்கு எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் மக்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

கோயில் திருவிழா:ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி தினத்தில் ஆண்கள், பெண்கள் என பலரும் காளி வேடம் இட்டு வணங்குவது வழக்கமாக உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்