ஆப்நகரம்

கும்பகோணம் 108 சிவ ஆலயத்தில் இன்று மகா கும்பாபிஷேகம்!

கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் 108 சிவ ஆலயத்தில் இன்று மகா கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

Samayam Tamil 11 Feb 2019, 12:19 pm
கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் 108 சிவ ஆலயத்தில் இன்று மகா கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

கும்பகோணம் அருகே உள்ள பாபநாசத்தில் 108 சிவாலயம் என்று அழைக்கப்படும் இராமலிங்க சுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.

இலங்கையில் ராவணன் வதத்திற்குப் பிறகு, ராமபிரான் அயோத்தி செல்லும் வழியில் தனது பாவ தோஷங்கள் நீங்குவதற்காக லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலம் என்பதால் இவ்வாலயம் ராமலிங்க சுவாமி ஆலயம் என்றழைக்கப்படுகிறது.

இவ்வாலயத்தின் ஒரு பகுதியில் ஒரே இடத்தில் 108 சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஆலயம் 108 சிவாலயம் என்றும் அழைக்கப்படுகிறது. இப் ழமையான சிவாலயத்தில் இன்று நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்