ஆப்நகரம்

திருப்பதிக்கு போட்டியாக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்டு பிரசாதம்

திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலைப் போல மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலும் லட்டு பிரசாதம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 26 Oct 2019, 3:35 pm
தமிழகம் என்றாலே பல்வேறு பழமை வாய்ந்த கோயில்கள் நிறைந்துள்ளன. கோயில்கள், பழம்பெரும் நூல்களால் தன் தொன்மையை மறகாமல் கொண்டிருக்கும் மாநிலம் ஆகும்.
Samayam Tamil Meenakshi Amman Temple
Meenakshi Amman Temple


இதில் மதுரை தொன்மையை உணர்த்தும் நகரமாக உள்ளது. அதிலும் மதுரை என்றாலே நினைவுக்கு வருவது மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில். ஒருமுறை உலக அதிசயத்தில் பங்கேற்றும் தன் பெருமையை உணர்த்தியுள்ளது.

அதே போல் அதிக பக்தர்கள் செல்லும் கோயிலாக திருப்பதி ஏலைமலயான் திருக்கோயில் உள்ளது. அங்கு லட்டு பிரசாதமாக கொடுப்பதும். பலரும் விரும்பக் கூடியதாக லட்டு உள்ளது.

அந்த வரிசையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், தீபாவளி முதல் லட்டு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது. இதற்காக லட்டு தயாரிக்கும் இயந்திரம் வாங்கப்பட்டு, அதற்கான சோதனை ஓட்டமும் நடைப்பெற்று வருகின்றது.

இதனை அடுத்து தீபாவளி முதல் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்படும் என இணை கமிஷனர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்