ஆப்நகரம்

தென்காசி கோபுரவாசல் காற்று பக்தர்களை உள் இழுக்கும் அதிசயம்... அறிவியல் உண்மை இதோ!

பல்வேறு புனித தலங்கள் பல்வேறு சிறப்பம்சங்கள் மற்றும் புராண கதைகளுடன் முன்னோர்கள் வடிவமைத்துள்ளனர். அந்த வகையில் தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கோபுரவாசல் மர்ம காற்றுடன் கூடிய அதிசயம் உள்ளது.

Samayam Tamil 31 Jul 2019, 4:01 pm

வடக்கில் உள்ள காசி திருத்தலத்திற்கு செல்ல முடியாதவர்கள், தெற்கில் உள்ள இந்த காசி விஸ்வநாதர் திருக்கோயிலுக்கு வந்து அருளைப் பெற வேண்டும் என்பதற்காக கட்டப்பட்டதால் தென்காசி என பெயர் பெற்றது.
Samayam Tamil Tenkasi Kasi Viswanathar Temple (2)


ஒவ்வொரு திருக்கோயிலும் ஒரு தனி சிறப்பு கொண்டிருப்பதைப் போல, இந்த தென்காசி கோயிலும் ஒரு அற்புத சிறப்பை கொண்டுள்ளது.

தென்காசி கோபுரவாசல் காற்று ஓர் அதிசயம்
தென்றல் தவழும் தென்காசியில் மன்னன் பராக்கிரம பாண்டியன் அமைக்கப்பட்டது பிரம்மாண்டமான இந்த இராஜ கோபுரவாசல்.

கோவில்களில் காம சிற்பங்கள் இருப்பதற்கான காரணம் என்ன?
இந்த இராஜ கோபுர வாசலில் பக்தர்களுக்கு ஆச்சரியப்படத்தக்க அதிசயம் காத்திருக்கிறது. பொதிகை மலையில் இருந்து ஆரியங்காவு கணவாய் வழியாக வரும் காற்று, கோபுர வாசலுக்குள் நுழையும் பக்தர்களுக்கு எதிராக மேற்கிலிருந்து கிழக்காக வீசி வரவேற்கிறது.

Temple Gopuram: கோயில் கோபுரத்தில் இருக்கும் நாசி எனும் உருவம் எப்படி வந்தது தெரியுமா?

கோபுர வாசலை கடந்து உள்ளே போகும் போது, கோபுர வாசலில் இருந்து இறங்கும் இடத்தில், காற்று சுழன்று சுற்றி வீசுவது போல ஒரு அனுபவம் ஏற்படும். தொடர்ந்து உள்ளே செல்லும் போது, காற்று உங்கள் பின் புறமாக கோவிலுக்குள் உங்களை உள்ளே தள்ளுவது போல, கிழக்கில் இருந்து மேற்காக காற்று வீசும் அதிசயம் உணர்வீர்கள்.

கோயிலில் புறாக்கள் வளர்க்கப்படுவது ஏன் தெரியுமா?- முன்னோர்களின் அசத்தல் அறிவு

எந்த தடுப்பும் இல்லாத ஒரே நேர்கோட்டில் காற்று இரண்டு எதிர் திசைகளில் வீசுவதை பக்தர்கள் அனுபவித்து மகிழலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்