ஆப்நகரம்

மீனாட்சியம்மன் கையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த கிளி!

மதுரை மீனாட்சியம்மன் உற்சவத்தில் அமர்ந்து உண்மையான கிளி அமர்ந்து அருள்பாலித்த‌து பக்தர்களை பரவசமடையச் செய்தது.

Samayam Tamil 16 Oct 2018, 10:36 am
ஆரணி கோயில் நவராத்திரி விழாவில் மதுரை மீனாட்சியம்மன் உற்சவத்தில் அமர்ந்து உண்மையான கிளி அருள்பாலித்த‌து பக்தர்களை பரவசமடையச் செய்தது.
Samayam Tamil மீனாட்சியம்மன் கையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த கிளி!
மீனாட்சியம்மன் கையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த கிளி!


அரணி அருகே உள்ள அரியாத்தம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் நவராத்திரி விழா பிரசித்தி பெற்றது. அந்தவகையில், இந்தாண்டும் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், நவராத்திரியின் ஐந்தாம் நாளான நேற்று முன்தினம் மதுரை மீனாட்சியம்மன் போல் உற்சவ சிலை அலங்கரிக்கப்பட்டது அப்போது, அம்மனின் வலது கையில் இருந்த ஆப்பிள் பழத்தின் மேல் திடீரென வந்து உட்கார்ந்த கிளி , பழத்தை கொத்தி கொத்தி தின்றது. இதைப்பார்த்த பக்தர்கள் பரவசமடைந்தனர்.

இதையடுத்து, மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது மீனாட்சியம்மன் முகத்தில் கிளி கொஞ்சி விளையாடியது.

கிளியின் செயலைப் பார்த்து மெய்மறந்த பக்தர்கள் அந்த மீனாட்சி அம்மனே நேரில் வந்து அருள்பாலித்ததாகக் கூறி, கிளியை வணங்கிச் சென்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்