ஆப்நகரம்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி தேர் திருவிழா கோலாகலம்!

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

Samayam Tamil 17 Mar 2019, 11:12 am
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
Samayam Tamil மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி தேர் திருவிழா கோலாகலம்!
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி தேர் திருவிழா கோலாகலம்!


சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனிப் பெருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான பங்குனி பெருவிழா, கடந்த 11 ஆம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதனிடையே விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான, தேர் திருவிழா இன்று நடைபெற்றது. அன்று காலை 6 மணிக்கு கபாலீஸ்வரர் தேரில் எழுந்தருள ஆயிரகணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அறுபத்து மூவர் விழா நாளை நடக்கிறது. இரவு ஐந்திரு மேனிகள் விழாவும் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து 20 ஆம் தேதி, தீர்த்தவாரி உற்சவம், புன்னை மரத்தடியில், சிவ வழிபாடு நடக்கிறது. அன்று மாலை 8:00 மணிக்கு, திருக்கல்யாண உற்சவத்துடன் விழா நிறைவு பெற்று, கொடி இறக்கப்படுகிறது. பிறகு 22 ஆம் தேதி, விடையாற்றி உற்சவம் துவங்குகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்