ஆப்நகரம்

இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம் பிடித்த 111.2 அடி உயரம் கொண்ட சிவலிங்கம்!

தமிழக – கேரளா எல்லைப்பகுதியில் உள்ள 111.2 அடி உயரம் கொண்ட சிவலிங்கம் இந்தியா புக் ஆஃப் ரெட்க்கார்டில் இடம் பிடித்துள்ளது.

Samayam Tamil 11 Jan 2019, 8:08 am
தமிழக – கேரளா எல்லைப்பகுதியில் உள்ள 111.2 அடி உயரம் கொண்ட சிவலிங்கம் இந்தியா புக் ஆஃப் ரெட்க்கார்டில் இடம் பிடித்துள்ளது.
Samayam Tamil sivan


கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரளா எல்லைப்பகுதியில் உள்ள செங்கல் பகுதியில் உள்ளது வரலாற்று சிறப்பு மிக்க மஹேஷ்வர ஸ்ரீ சிவ பார்வதி கோயில். இந்தக் கோயில் கடந்த 2012ம் ஆண்டு மே 3ம் தேதி உலகிலேயே மிக உயரம் கொண்ட சிவலிங்கம் அமைக்கும் பணி தொடங்கியது.

இதற்காக, இந்தியாவின் பல்வேறு சிவன் கோயில்களுக்குச் சென்று அங்குள்ள மாதிரிகளைக் கொண்டு கட்டுமான பணி தொடங்கியது. இந்தப் பணியை மஹேஷ்வரானந்தா சரஸ்வதி சுவாமிகள் தொடங்கினார். 60 பேர் கொண்ட குழு 6 ஆண்டுகளாக சிவலிங்க சிலையை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பஹ்டு குறிப்பிடத்தக்கது.

தற்போது 6 ஆண்டுகள் ஆன நிலையில், உலகின் மிக உயரமான சிவலிங்கமாக தேர்வாகியுள்ளது. அதோடு, இந்தியா புக் ஆஃப் ரெக்காடிலும் இடம் பிடித்துள்ளது. இதன் உயரம் 111.2 அடி என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனை உயரம் கொண்ட சிவலிங்கம் 8 நிலைகளில் உருவாகி வருகிறது.

ஒவ்வொரு நிலையிலும், தியான மண்டபங்களும், சிவலிங்கத்தின் உள்ளே குகைக்குள் பல முனிவர்கள் தவம் செய்வது போன்றும், சிற்ப வடிவமைப்புடன் தறைத்தளத்தில் பக்தர்கள் அபிஷேகம் செய்து வழிபடும் வகையிலும் கட்டப்பட்டுள்ளது.

கைலாய மலையில் சிவன் பார்வதி இருப்பது போன்று அழகிய சிலையுடன் இந்த சிவலிங்க சிலை வடிவமைக்கப்பட்டு வருகிறது. வருகின்ற மஹா சிவராத்திரியை முன்னிட்டு இந்த 111.2 அடி உயரம் கொண்ட சிவலிங்க சிலை திறக்கப்பட இருக்கிறது. அதற்கு முன்னதாக, இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டின் ஒருங்கிணைப்பாளர் ஷாகுல் ஹமீது தலைமையிலான அதிகாரிகள் குழு சிவலிங்க சிலையை நேரில் சென்று பார்வையிட்டு சான்றிதழ் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்