ஆப்நகரம்

தாமிரபரணி புஷ்கர விழா: குறுக்குத்துறை, தைப்பூசத்துறையில் புனித நீராட அனுமதி!

புஷ்கர விழாவை முன்னிட்டு தாமிரபரணி குறுக்குத்துறை, தைப்பூசத்துறையில் பக்தர்கள் புனித நீராட அனுமதி வழங்கும் படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 9 Oct 2018, 5:20 pm
144 ஆண்டுகளுக்குப் பிறகு தாமிரபரணி மஹா புஷ்கர விழா வரும், அக்டோபர் 12ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
Samayam Tamil தாமிரபரணி புஷ்கர விழா: குறுக்குத்துறை, தைப்பூசத்துறையில் புனித நீராட அனுமதி!
தாமிரபரணி புஷ்கர விழா: குறுக்குத்துறை, தைப்பூசத்துறையில் புனித நீராட அனுமதி!


இதையொட்டி, தைபூசப் படித்துறை, குறுக்குத்துறை ஆகிய இடங்களில் புனித நீராடத் தடை விதித்து இந்து சமய அறநிலையத் துறை மற்றும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்தும், விழாவைப் பாதுகாப்புடன் நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய உத்தரவிடக் கோரியும் புலவர் மகாதேவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு கடந்த 4-ஆம் தேதி நீதிபதி மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதியும், சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டும் தைபூசப் படித்துறை, குறுக்குத்துறை பகுதியில் புனித நீராடத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, தீர்ப்பை அக்டோபர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆற்றின் நீரோட்டத்தைப் பொறுத்துத் தைப்பூசப் படித்துறை, குறுக்குத்துறை ஆகிய இடங்களில் பக்தர்கள் நீராட அனுமதிப்பது குறித்து முடிவெடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கும், காவல்துறைக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து, மழையின் அளவு, தாமிரபரணியில் ஓடும் தண்ணீரின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில், தைப்பூசப் படித்துறை, குறுக்குத்துறை படித்துறை ஆகிய இடங்களில் பக்தர்கள் குளிக்க அனுமதி வழங்கவேண்டும்’ என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்