ஆப்நகரம்

திருப்பதி லட்டு, கூட்டாஞ்சோறும், கஷாயம் போன்று வித்தியாசமான பிரசாதங்களால் புகழ்பெற்ற கோயில்கள்!

பல்வேறு கோயில்களில் ஒவ்வொரு கடவுளும் வித்தியாசமான, தனிச்சிறப்புடன் இருப்பது வழக்கம். கோயில்களில் உள்ள கடவுள்கள் மட்டுமில்லாமல், அவற்றில் வழங்கப்படும்ம் பிரசாதமும் பல கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகவும், வித்தியாசமானதாகவும் உள்ளதை இங்கு பார்ப்போம்.

Samayam Tamil 13 Jun 2019, 11:26 pm

தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதிலும் உள்ள கோயில்கள் ஒவ்வொன்றிலும் பிரசாதமாக ஏதாவது ஒரு உணவுப் பிரசாதம் வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது.
Samayam Tamil Temple Prasad 1


அப்படி பிரசாதம் வழங்கப்படாவிட்டாலும், பெருமாள் கோயிலில் குங்குமம், துளசி தீர்த்தம், துளசி உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கபடுகிறது. சிவ தளங்களில் திருநீர் (விபூதி) பிரசாதமாக வழங்கப்படுகிறது. உணவு இல்லாவிட்டாலும் இறைவனின் ஆசி நமக்கு கிடைக்கும் வகையில் கொடுக்கப்படுகின்றது.

வித்தியாசமான பிரசாதம்:
திருப்பதியில் லட்டு பிரசாதமாகவும், பழனியில் பஞ்சாமிர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுவது மிகவும் விசேஷமாக பார்க்கப்படுகின்றது.

எண்ணிய காரணங்கள் நிறைவேற சாய்பாபா விரதம்! - விதிமுறைகள் என்ன?

அந்த வகையில் தமிழகத்தில் பல்வேறு புகழ்பெற்ற கோயிலில் வழங்கப்படும் பிரசாதம் குறித்து பார்ப்போம்.

திருப்புல்லாணி - பாயாசம்
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருப்புல்லாணி ஆதிஜெகன்னாத பெருமாள் கோவில் ராமாயண வரலாற்றுடன் தொடர்புடையதாக கூறப்படுகின்றது.

பூரி ஜெகன்னாதர் கோயில் - மகா பிரசாதம் (அனைத்து வகை உணவுகள்- சைவம்)

காஞ்சிபுரம் வரதராஜர் கோயில் - குடலை இட்லி
வைத்தீஸ்வரன் கோயில் - தினை மாவு
திருச்செந்தூர் - அரிசிப்புட்டு (ஆறுபடை வீடுகளில் ஒன்று)
திருவல்லிக்கேணி - திருக்கண்ணமுது
சிதம்பரம் - களி, சம்பா சாதம் சிறப்பான நிவேதனமாகும்
அழகர் கோவில் - தோசை ( முழு உளுந்தை ஊற வைத்து பச்சரிசி மாவுடன் மிளகு சீரகம் சேர்த்து நெய்யை ஊற்றி தயாரிக்கப்படும் தோசை)

திருப்பதி ஏழுமலையானை இப்படி வணங்கினால் பூரண பலன் கிடைக்கும்!


ஆழ்வார் திருநகரி - வங்கார தோசை
சபரிமலை - அப்பம் மற்றும் அரவணை

சுக்கு மிளகு கஷாயம் நிவேதனம் -குற்றாலம் குற்றாலநாதர் மற்றும் குழல்வாய்மொழி அம்மனுக்கு நாள்தோறும் சுக்கு மிளகு சேர்த்து கஷாயம் படைக்கப்படுகிறது. ( இந்த குற்றாலம் அருவியை இருவருக்கும் தலைவனையும் ஜலதோஷம் வராமல் இருக்கவே இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது.)தமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கம்... கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் சிறப்புகள்திருநெல்வேலி பூமாதேவி அம்மன் ஆலயம் - தமிழ் மாதத்தில் கடைசி வெள்ளியன்று கூட்டாஞ்சோறும் சர்க்கரைப் பொங்கல் நிவேதனம். (துவரம்பருப்பு அரிசி காய்கறிகள், தேங்காய் அரைத்து போட்டு சேர்த்த கூட்டாஞ்சோறு) பகவதி ஆலயம் எர்ணாகுளம் கூத்தாட்டுக்குளம் நெல்லிக்காட்டு பகவதி ஆலயத்தில் மருந்து பிரசாதம் வழங்கப்படுகிறது.காளிகாம்பாள் கோவில்: திருச்சி காளியம்மன் கோவிலுக்கு முந்தைய பஸ் ஸ்டாப்பில் உள்ள காளிகாம்பாள் கோவில்- வெள்ளி தோறும் ராகு காலத்தில் துர்க்கைக்கு இஞ்சிச்சாறும் தேனும் கலந்து அபிஷேகம் செய்து அதை பிரசாதமாக வழங்குகிறார்கள். இதனை குழந்தையின் நாவில் தடவினால் வாய் பேசாத குழந்தையும் சில நாட்களில் பேசத் தொடங்கி விடுமாம். உறையூர் கமலவல்லி சமய அழகிய மணவாளர் ஆலயம்- குங்குமத்திற்கு பதிலாக சந்தனம் பிரசாதம் தரப்படுகிறது. இதனை நாம் அனைவரும் உட்கொள்ளலாம்.இப்படி பல்வேறு கோயில்களில் வித்தியாசமான பிரசாதங்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகின்றன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்