ஆப்நகரம்

திருவண்ணாமலை கோயிலில் இன்று பஞ்ச ரதங்களின் தேரோட்டம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் பஞ்ச ரதங்களின் தேரோட்டம் இன்று கோலகலமாக நடைபெற்றது.

Samayam Tamil 20 Nov 2018, 12:59 pm
திருவண்ணாமலை கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு இன்று பஞ்ச ரதங்களின் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Samayam Tamil திருவண்ணாமலை கோயிலில் இன்று பஞ்ச ரதங்களின் தேரோட்டம்!
திருவண்ணாமலை கோயிலில் இன்று பஞ்ச ரதங்களின் தேரோட்டம்!


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் ஆறாம் நாளான நேற்றிரவு, வெள்ளித் தேரில் அண்ணாமலையார்-உண்ணாமுலை அம்மன் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, பஞ்ச மூர்த்திகளின் மகாரத தேரோட்டம் இன்று காலை 6.30 மணிக்கு துவங்கியது. இதையொட்டி, அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு உண்ணாமுலையம்மன், அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து விநாயகர், முருகர், அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் மற்றும் சண்டிகேஷ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் தேரில் எழுந்தருளினர். பின்னர் காலை 6.35 மணியளவில் விநாயகர் தேரோட்டம் துவங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபத் திருவிழா நவம்பர் 22-ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்