ஆப்நகரம்

திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவ விழா: நாளை இரவு கருட சேவை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிகர நிகழ்ச்சியான கருடசேவை நாளை இரவு நடக்கிறது.

Samayam Tamil 13 Oct 2018, 1:44 pm
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் சிகர நிகழ்ச்சியான கருடசேவை நாளை இரவு நடக்கிறது.
Samayam Tamil திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவ விழா: நாளை இரவு கருட சேவை!
திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவ விழா: நாளை இரவு கருட சேவை!


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா களை கட்டியுள்ளது. விழாவின் நான்காவது நாளான இன்று, காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை கல்ப விருட்ச வாகன வீதி உலா நடந்தது. அதில், மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோயிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதனையடுத்து இன்றிரவு, சர்வ பூபால வாகனத்தில் உற்சவர் ஏழுமலையான் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவின் சிகர நிகழ்ச்சியான கருடசேவை நாளை இரவு 7 மணிக்கு நடக்கிறது.

விடுமுறை தினத்தில் கருட சேவை வருவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, சென்னை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ஓசூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 150 சிறப்பு பஸ்கள் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படுகிறது.

கருட சேவை நாளை நடைபெறுவதை முன்னிட்டு, திருமலையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பக்தர்களின் வசதிக்காக, பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருவதாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளானர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்