ஆப்நகரம்

திருவண்ணாமலை தீபத் திருவிழா: சென்னையில் இருந்து ஆயிரம் சிறப்பு பேருந்துகள்!

தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 3 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரி தெரிவித்தார்.

Samayam Tamil 16 Nov 2018, 11:02 am
தீபத் திருவிழாவை முன்னிட்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரி தெரிவித்தார்.
Samayam Tamil thiruvannamalai-karthikai-deepam
திருவண்ணாமலை தீபத் திருவிழா: சென்னையில் இருந்து ஆயிரம் சிறப்பு பேருந்துகள்!


திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் வரும் 23ம் தேதி காலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

இதனிடையே தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு வரும் 22 மற்றும் 23-ம் தேதிகளில், சென்னை கோயம்பேட்டில் இருந்து 750 சிறப்பு பேருந்துகளும், தாம்பரத்தில் இருந்து 250 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அத்துடன் திருச்சி, விழுப்புரம், வேலூர், புதுச்சேரி, கடலூர், பெரம்பலூர், விருத்தாசலம், கள்ளக்குறிச்சி, சேலம், காஞ்சிபுரம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, பக்தர்கள் வந்து செல்ல அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சுமார் 2,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்