ஆப்நகரம்

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நாளை நடைபெறுவதை முன்னிட்டு, கோவிலில் பாதயாத்திரை பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

Samayam Tamil 30 Jan 2018, 10:31 am
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நாளை நடைபெறுவதை முன்னிட்டு, கோவிலில் பாதயாத்திரை பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
Samayam Tamil thai poosam festival in tiruchendur temple
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்!


முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நாளை நடக்கிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பச்சை மற்றும் காவி நிற ஆடை அணிந்தும், காவடி எடுத்தும், அலகு குத்தியும் பாத யாத்திரையாக கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

மேலும் நாளை சந்திரகிரகணம் என்பதால் திருச்செந்தூர் கோயிலின் பூஜை நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன. அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபஆராதனையும் தொடர்ந்து உதயமார்த்தாண்ட அபிஷேகமும், அதைத் தொடர்ந்து தீபாராதனையும் நடக்கிறது. காலை 7 மணிக்கு உச்சிக்கால அபிஷேகமும் தீபாராதனையும் நடக்கிறது.

தீபாராதனைக்குப் பின், தைப்பூசத்தை முன்னிட்டு காலை 8 மணிக்கு சுவாமி அலைவாய் உகந்த பெருமாள் திருச்சப்பரத்தில் எழுந்தருளி, முக்கிய வீதி வழியாக உலா வந்து தைப்பூச மண்டபத்தை அடைகிறார். அங்கு, அவருக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடக்கின்றன. மாலை 4 மணிக்கு, சுவாமி அலைவாய் உகந்த பெருமாள் ரத வீதிகள் வழியாக வந்து திருக்கோயிலை அடைகிறார். பின், சந்திர கிரகணத்தை முன்னிட்டு 4.15 மணிக்கு சுவாமிக்கு பட்டு சாத்தப்பட்டு நடை அடைக்கப்படுகிறது. பின், சந்திர கிரகணம் முடிந்ததும், இரவு 9.30 மணிக்கு மீண்டும் நடைதிறக்கப்பட்டு, ராக்கால பூஜைகள் முடிந்த பின் கோயில் நடை அடைக்கப்படும்' என கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்