ஆப்நகரம்

ஏன் திறமையான இந்த இரண்டு வீரர்கள் மட்டும் பாரத போரில் பங்கேற்கவில்லை தெரியுமா?

இந்து சமயத்தில் பெரும் காவியங்களாக இராமாயணம், மகாபாரதம் உள்ளது. இதில் மகாபாரத இதிகாசத்தை வடமொழியில் வியாசய் இயற்றினார். இந்த இதிகாசத்தில் முக்கிய நிகழ்வோடு பல்வேறு கிளை நிகழ்வுகளும் உள்ளன.

TOI Contributor 9 Feb 2017, 4:58 am
இந்து சமயத்தில் பெரும் காவியங்களாக இராமாயணம், மகாபாரதம் உள்ளது. இதில் மகாபாரத இதிகாசத்தை வடமொழியில் வியாசய் இயற்றினார். இந்த இதிகாசத்தில் முக்கிய நிகழ்வோடு பல்வேறு கிளை நிகழ்வுகளும் உள்ளன.
Samayam Tamil these 2 great warriors did not participate the war of mahabhara
ஏன் திறமையான இந்த இரண்டு வீரர்கள் மட்டும் பாரத போரில் பங்கேற்கவில்லை தெரியுமா?

பாண்டவர்களுக்கும், கெளரவர்களுக்கும் இடையே 18 நாட்கள் நடந்த மகாபாரத போரில் திறமை வாய்ந்த பலராமன் மற்றும் ருக்மணியின் சகோதரன் ருக்மி ஆகிய இருவர் போரிடவில்லையாம்.

பலராமன் :
கிருஷ்ணரின் அண்ணனான பலராமன் மாபெரும் பலசாலி. இருப்பினும் இவர் பாரத போரில் கலந்து கொள்ளவில்லை. அஸ்தினாபுரம் மன்னன் திருதராஷ்டிரருக்கு பின் துரியோதனன் தான் ஆட்சி நடத்த வேண்டும் என விரும்பினார். இருப்பினும் கெளரவர்களின் தீய செயலை வெறுத்தார்.
அதே சமயம் பாண்டவர்கள் சூதாட்டம் ஆடியது பிடிக்கவில்லை.

அர்ஜுனனை வெறுத்த பலராமன்:
அர்ஜுனன் பலராமனின் தங்கையான சுபத்திரையை காதலித்து ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டதால், பாண்டவர்களை ஆதரிக்க மறுத்தார். போர் செய்ய விரும்பாத பலராமன் அந்த சமயம் புனித யாத்திரை செல்ல திட்டமிட்டார்.

ருக்மி:
கிருஷ்ணரின் மனைவி ருக்மணி. ரும்கணியின் இளைய சகோதரன் தான் ருக்மி. இவரும் மிகப்பெரும் பலசாலி. இருப்பினும் இவர் தன் பலத்தால் மிகவும் தற்பெருமையுடன் இருந்ததால், பாண்டவர்களும், கெளரவர்களும் நிராகரித்ததன் காரணமாக, இவர் மகாபாரத போரில் கலந்து கொள்ளவில்லை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்