ஆப்நகரம்

திருப்பதியில் புரட்டாசி பிரம்மோத்ஸவம் விழா ஏற்பாடுகள் தீவிரம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் அக்டோபர் 3-ம் தேதியில் இருந்து 11-ம் தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெறுகிறது.

TOI Contributor 15 Sep 2016, 1:36 pm
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் அக்டோபர் 3-ம் தேதியில் இருந்து 11-ம் தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெறுகிறது.
Samayam Tamil tirupati purattasi bramorchavam
திருப்பதியில் புரட்டாசி பிரம்மோத்ஸவம் விழா ஏற்பாடுகள் தீவிரம்!


இதையொட்டி தினமும் வழக்கம்போல் காலை 9 மணியில் இருந்து 11 மணி வரையிலும், இரவு 9 மணியில் இருந்து 11 மணி வரையிலும் வாகனத்தில் திருவீதிஉலா வரும் வைபவம் நடக்கிறது. 7ம் தேதி அன்று பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தங்க கருடவாகன வீதிஉலா நடக்கிறது.

அன்று ஒரே நாளில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் திருமலையில் திரள்வார்கள் என்கிறார்கள் ஆலய நிர்வாகிகள். வழக்கமாக தங்க கருடவாகன வீதிஉலா இரவு 8 மணியில் இருந்து இரவு 12 மணிவரை நடைபெறும். ஆனால், இந்த வருடம் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே 7-ந்தேதி அன்று இரவு 7.30 மணியில் இருந்து இரவு 12.30 மணி வரை தங்க கருடவாகன வீதி உலாவை நடத்த திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தேவஸ்தான ஆகம பண்டிதர்கள், பெரிய ஜீயர்சுவாமி, சின்னஜீயர்சுவாமி ஆகியோரின் ஆலோசனையின்படி தங்க கருட வாகன வீதிஉலா வரும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதனால், கோயிலின் நான்கு மாடவீதிகளில் அமர்ந்திருந்து வாகன வீதிஉலாவை தரிசிக்கும் பக்தர்களுக்காக தங்க கருட வாகனம் அதிக நேரம் நிறுத்தி வைக்கப்படும். அப்போது பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து மலையப்பசாமியை தரிசிக்க வசதியாக இருக்கும் என்று தெரிவித்தார்கள் ஆலய நிர்வாகிகள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்