ஆப்நகரம்

திருத்தணி ஆடிக்கிருத்திகை விழா பூஜை

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா, வருகிற 28ம் தேதி நடைபெறுகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

TOI Contributor 26 Jul 2016, 6:40 pm
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா, வருகிற 28ம் தேதி நடைபெறுகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
Samayam Tamil tiruttani aadi krithigai
திருத்தணி ஆடிக்கிருத்திகை விழா பூஜை


முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் ஆலயமான திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது. தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி முதலான விழாக்கள் இங்கே சிறப்புற நடந்தாலும், ஆடிக்கிருத்திகை விழா அமர்க்களமாக நடைபெறுவது வழக்கம்.

வருகிற 28ம் தேதி ஆடிக்கிருத்திகை. இதையொட்டி மூன்று நாள் விழாவாக நடைபெறும் இந்த விழாவில், தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள். 28ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து உள்ளது தமிழக அரசு.

இந்த விழாவுக்கு வருகை தருவதற்காக, நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் திருவள்ளூர் மற்றும் சென்னயில் இருந்து இயக்கப்படுகின்றன.

மலையடிவாரப் பகுதியில், காவடிகள் வருவதற்கும் பக்தர்கள் பால் குடம் எடுத்து வருவதற்கும் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. முடிகாணிக்கை செலுத்துவதற்கு வரும் பக்தர்களுக்கு, இரண்டு மூன்று இடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

ஆடிக்கிருத்திகை மற்றும் அதையொட்டி நடைபெறும் தெப்பத் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத் துறையினரும் பூஜை ஏற்பாடுகளை சிவாச்சார்யர்களும் செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்