ஆப்நகரம்

நவராத்திரி நன்னாளில்... சப்தமி திதியில் ஹயக்ரீவ வழிபாடு!

நவராத்திரி திருவிழா சோழர் காலத்தில் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது. நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் பெறலாம்.

TOI Contributor 6 Oct 2016, 6:38 pm
நவராத்திரி திருவிழா சோழர் காலத்தில் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது. நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் பெறலாம்.
Samayam Tamil tithi sapthami hayakriva worship
நவராத்திரி நன்னாளில்... சப்தமி திதியில் ஹயக்ரீவ வழிபாடு!


விஜயதசமி தினத்தன்று பெருமாள் கோயில்களில் வன்னி மரக்கிளையை வைத்து அதில் பெருமாளை எழுந்தருளச் செய்து பூஜை நடத்துவார்கள். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் கிரக தோஷங்கள் விலகி ஓடி விடும் என்பது ஐதீகம்.

நவராத்திரி பண்டிகையை முதன் முதலில் ஸ்ரீராமபிரான்தான் கொண்டாடியதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன.

நவராத்திரி நாட்களில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். ஈசனும், அம்மையும் ஒன்று சேர்ந்து ஊஞ்சலில் ஆடுகின்ற தரிசனத்தை 9 நாட்களும் தரிசித்தால், நவராத்திரி பூஜை செய்த பலன் கிடைக்கும்.

நவராத்திரி நாளில் வரும் சப்தமி திதியன்று வழிபட்டால் ஸ்ரீஹயக்ரீவப்பெருமாளின் அருளைப் பெறலாம். அன்று ஸ்ரீலலிதாசகஸ்ர நாமத்தையும் நவாக்சரி மந்திரத்தையும் ஓதுவது கூடுதல் பலன்களைத் தரும்.
நவராத்திரி பூஜையை அஸ்தம், சித்திரை அல்லது மூலம் நட்சத்திர நாட்களில் தொடங்குவது நல்லது. இந்த நாட்களில் வைதிருதி யோக நேரம் இருந்தால் மிகவும் நல்லது.

விஜய தசமி தினத்தன்று ஸ்ரீஆயுர் தேவியை போற்றி வழிபட வேண்டும். இதுதான் நவராத்திரி பூஜையின் நிறைவான வழிபாடு!

அடுத்த செய்தி

டிரெண்டிங்