ஆப்நகரம்

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அபிஷேகம் செய்ய வேண்டும்?

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

TNN 25 Aug 2017, 8:31 am
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
Samayam Tamil vinayagar chaturthi special according to astrology who are doing abhishekam in temple
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அபிஷேகம் செய்ய வேண்டும்?


ஆண்டுதோறும், தமிழ் மாதமான ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆகஸ்ட் 25ம் தேதி (இன்று) விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாப்பட்டு வருகிறது. இதனைமுன்னிட்டு வினை தீர்க்கும் விநாயகப் பெருமானை விநாயகர் சதுர்த்தி அன்று விரதமிருந்து அருகிலுள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று, அவருக்குப் பிடித்த அருகம்புல் மற்றும் கொழுக்கட்டை ஆகியவற்றை படைத்து வழிபட்டால் அவரது பரிபூரண அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மேலும், விநாயகர் சதுர்த்தி அன்று ஒவ்வொரு ராசிக்காரர்களும் அவர்களுக்கு ஏற்ற அபிஷேகப் பொருட்களால் விநாயகரை அபிஷேகம் செய்து வழிபட்டால் விநாயகரின் பரிபூரண அருள் கிடைக்கும். அந்த வகையில் எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அபிஷேகம் செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

மேஷம்: மஞ்சள் பொடியால் அபிஷேகம் செய்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் எளிதில் நிறைவேறும்.
ரிஷபம்: பால் கொண்டு அபிஷேகம் செய்தால் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.
மிதுனம்: எலுமிச்சைசாறினால் அபிஷேசகம் செய்தால் மன நிம்மதி கிடைக்கும்.
கடகம்: பச்சரிசி மாவினால் அபிஷேகம் செய்தால் வாழ்வில் இன்னல்கள் யாவும் நீங்கும்.
சிம்மம்: பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்தால் தங்களுடைய விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
கன்னி: சாத்துக்குடியால் அபிஷேகம் செய்தால் பகை நீங்கும்.
துலாம்: தேன் கொண்டு அபிஷேகம் செய்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.
விருச்சிகம்: இளநீர் கொண்டு அபிஷேகம் செய்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் அனைத்தும் விலகும்.
தனுசு: மஞ்சள் பொடி மற்றும் தேனால் அபிஷேகம் செய்தால் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.
மகரம்: சந்தனத்தால் அபிஷேகம் செய்தால் உயர் பதவிகள் எளிதில் கிடைக்கப் பெறுவீர்கள்
கும்பம்: பஞ்சாமிர்தம் கொண்டு அபிஷேகம் செய்தால் செல்வ செழிப்பு உண்டாகும்.
மீனம்: மஞ்சள் பொடி மற்றும் இளநீரால் அபிஷேகம் செய்தால் செல்வாக்கு அதிகரிக்கும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்