ஆப்நகரம்

திருமணம் முடிந்து எதற்காக பெண்ணும், மாப்பிள்ளையும் ஏழு அடி நடக்கின்றனர்?

திருமணத்தின்போது நடத்தப்படும் பல்வேறு சாஸ்திர சம்பிரதாயங்கள் எதற்காக? என்பது இன்றும் பலருக்கும் தெரிவதில்லை. அறிந்து கொள்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்வதில்லை. திருமணம் முடிந்து எதற்காக மணப்பெண்ணும், மாப்பிள்ளையும் ஏழு அடி வைக்கின்றனர் என்பதை பார்ப்போம்:

TOI Contributor 3 Mar 2017, 2:20 pm
திருமணத்தின்போது நடத்தப்படும் பல்வேறு சாஸ்திர சம்பிரதாயங்கள் எதற்காக? என்பது இன்றும் பலருக்கும் தெரிவதில்லை. அறிந்து கொள்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்வதில்லை. திருமணம் முடிந்து எதற்காக மணப்பெண்ணும், மாப்பிள்ளையும் ஏழு அடி வைக்கின்றனர் என்பதை பார்ப்போம்:
Samayam Tamil why bride and bridegroom are taking 7 steps during marriage
திருமணம் முடிந்து எதற்காக பெண்ணும், மாப்பிள்ளையும் ஏழு அடி நடக்கின்றனர்?

முதல் அடியில் பஞ்சமில்லாமல் வாழ வேண்டும்

இரண்டாம் அடியில் ஆரோக்கியமாக வாழ வேண்டும்

மூன்றாம் அடியில் நற்காரியங்களில் எப்போதும் ஈடுபட வேண்டும்

நான்காம் அடியில் தர்மங்கள் நிலைக்க வேண்டும்

ஐந்தாம் அடியில் சுகமும், செல்வமும் எப்போது கிடைக்க வேண்டும்

ஆறாவது அடியில் லட்சுமி கடாட்சம் கிடைக்க வேண்டும்

ஏழாவது அடியில் நாட்டில் நல்ல பருவநிலை தொடர்ந்து கிடைக்க வேண்டும்

சாதாரணமாக வழியில் நடந்து செல்லும்போது, ஒருவரை ஒருவர் கடந்து செல்ல முயற்சிக்கும்போது அல்லது வேகமாக செல்ல முயற்சிக்கும்போது, ஏழாவது அடியில் ஒருவர் முந்தி செல்வார் அல்லது மற்றொருவர் விட்டுக் கொடுப்பார் என்று சாஸ்திர சம்பிரதாயங்களின்படி கண்டறியப்பட்டுள்ளது. ஏழு அடிக்கு மேல் அந்தப் போட்டி நீளுவதில்லை. இது யதேச்சையாக நடப்பவர்களுக்குத்தான். அன்று நம் முன்னோர்கள் கொண்டு வந்த எந்த சம்பிரதாயங்களாக இருந்தாலும், அனைத்தும் காரணங்கள் அடிப்படையில் கொண்டு வரப்பட்டவைதான்.
Why bride and bridegroom are taking 7 steps during marriage!!

அடுத்த செய்தி

டிரெண்டிங்