ஆப்நகரம்

ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தப்படுவது ஏன்?

ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தப்படுவது ஏன்?

TOI Contributor 20 Oct 2016, 4:53 pm
விஷ்ணு அலங்காரப்பிரியர், சிவபெருமான் அபிஷேகப்பிரியர், ஆஞ்சநேயர் ஸ்தோத்திரப்பிரியர் என்று சொல்வதுண்டு. ஆஞ்சநேயர் வழிபாடு குடும்பத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தி வாழ்வை வளமாக்கும் என்றும், அனைவரின் கஷ்டங்களை தீர்ப்பார் என்றும் அனைவராலும் நம்பப்படுகிறது. அனுமனை பூஜித்தால் மனக்குழப்பங்கள் தீரும், பணக்கஷ்டங்கள் விலகும் என்றும் கூறுகின்றனர். ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்துவதற்கும் காரணம் உண்டு.
Samayam Tamil why should wear betel malai for hanuman
ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தப்படுவது ஏன்?


அசோகவனத்தில் அனுமான் சீதையைக்கண்டு ராமனைப்பற்றிய விவரங்களைக்கூறி ராமரின் கணையாழியை சீதையிடம் கொடுத்து, சூடாமணியைப்பெற்றார். அனுமான் விடைபெறும் சமயம் அவரை ஆசிர்வதிக்க விரும்பிய சீதை தான் அமர்ந்திருந்த வெற்றிலைக்கொடியில் உள்ள வெற்றிலைகளைப்பறித்து பூக்கள் போல் அனுமானின் தலையில் தூவி ஆசிர்வாதம் வழங்கினார். இதன் நினைவாகவே அனுமானுக்கு வெற்றிலை மாலை சாத்தப்படுகிறது என்று கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்