ஆப்நகரம்

வசம்பு வளையல் ஏன்?

‘வசம்பு’ என்ற மூலிகைக்கு கிராமங்களில் ‘பிள்ளை வளர்த்தி’ என்றே பெயர். இதன் அடிப்பகுதியான - வேர்ப்பகுதி கட்டையாக இருக்கும். இதனை சிறு சிறு மணிகளைப் போல செய்து, நூலில் கோர்த்து வளையல் போல குழந்தைகளின் கைகளில் அணிவிப்பார்கள்.

TOI Contributor 16 Jul 2016, 12:02 pm
‘வசம்பு’ என்ற மூலிகைக்கு கிராமங்களில் ‘பிள்ளை வளர்த்தி’ என்றே பெயர். இதன் அடிப்பகுதியான - வேர்ப்பகுதி கட்டையாக இருக்கும். இதனை சிறு சிறு மணிகளைப் போல செய்து, நூலில் கோர்த்து வளையல் போல குழந்தைகளின் கைகளில் அணிவிப்பார்கள்.
Samayam Tamil why vasambu bangle
வசம்பு வளையல் ஏன்?

இது எதற்காக? வசம்பு செடியின் வேர் வாசனையாக இருக்கும். இதன் மணத்தை 10, 15 அடி தூரத்தில் இருந்தும் கூட நுகர முடியும். குழந்தைகள் இயல்பாக கைகளை வாயில் வைத்துக்கொள்ளும் பழக்கம் கொண்டிருக்கும். வசம்பு வளையல்களை குழந்தைகள் கையில் அணிவித்தால், அப்போது குழந்தையின் எச்சில் வசம்பில் பட்டு அதன் சாறு குழந்தை வாயிற்குள் செல்லும். இதன் பலன் என்ன? கைக்குழந்தைகளின் பிரதான உணவே பால்தான். பால் சீரணிக்கப் பலமணிநேரம் ஆகும். குழந்தையின் ஜீரண சக்தியைத் தூண்டக்கூடிய மருந்தாக பிள்ளை வளர்த்தி என்னும் வசம்பை கையில் வளையலாகப் பயன்படுத்தினார்கள்.

தாயார் தன் கழுத்திலும் வசம்பை மாலையாக போட்டுக் கொள்ள, அதை குழந்தை எடுத்து வாயில் வைக்கும் போதும் இதே பலனைத் தருகிறது வசம்பு!

வசம்பைத் தேய்த்து குழந்தையின் கன்னத்திலும் நெற்றியிலும் பொட்டு வைப்பது கிராமத்தில் இன்றைக்கும் வழக்கமாக உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்