ஆப்நகரம்

சாலை கட்டமைப்பு திட்டத்திற்கு ரூ.3156 கோடி

சாலை கட்டமைப்பு பராமரிப்பு திட்டத்திற்கு ரூ.3156 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

TNN 16 Mar 2017, 2:32 pm
2017-18ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் இன்று நடைபெற்றது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நடந்த முதல் பட்ஜெட் என்பதால் அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். சபாநாயகர் தனபால் பட்ஜெட் தாக்கலை தொடங்கி வைத்தார். இதில், நிதியமைச்சர் ஜெயக்குமார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகழ்பாடி பட்ஜெட் உரையை தொடங்கினார்.
Samayam Tamil road infra maintenance gets rs 3156 crore
சாலை கட்டமைப்பு திட்டத்திற்கு ரூ.3156 கோடி


முக்கிய அம்சங்களை அறிவித்தவாறு தொடர்ந்து பட்ஜெட் உரையை வாசித்த நிதியமைச்சர் நேரம் அதிகரிக்க அதிகரிக்க வேகமாக பட்ஜெட் வாசிக்கத் தொடங்கினார். இதில், சாலை கட்டமைப்பு பராமரிப்பு திட்டத்திற்கு ரூ.3156 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அறிவித்தார். அதோடு, நெடுஞ்சாலை பாதுகாப்பு திட்டத்திற்கும் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

Road infra maintenance gets Rs 3156 crore

அடுத்த செய்தி

டிரெண்டிங்