ஆப்நகரம்

எஸ்.பி.ஐ வங்கியில் வீட்டிலிருந்தே வேலை: குதூகலத்தில் வங்கி ஊழியர்கள்

எஸ்.பி.ஐ வங்கி தனது ஊழியர்களுக்கு வீட்டில் இருந்த படியே வேலை பார்க்கும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

TNN 8 Mar 2017, 4:37 pm
மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வீட்டில் இருந்தபடியே வேலை செய்யும் புதிய வசதியை தங்களது ஊழியர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. வங்கி ஊழியர்கள் அவசரக் காலங்களில் வீட்டில் இருந்தபடியே பயண நேரத்தைக் குறைத்துக்கொண்டு வேலை செய்வதற்கான திட்டத்திற்கு எஸ்.பி.ஐ. நிர்வாகிகள் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
Samayam Tamil sbi launches work from home facility employees
எஸ்.பி.ஐ வங்கியில் வீட்டிலிருந்தே வேலை: குதூகலத்தில் வங்கி ஊழியர்கள்


இந்த வசதிக்காக மொபைல் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தி செயலிகளை உருவாக்கும் பணியில் எஸ்.பி.ஐ வங்கி ஈடுபட்டு வருவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வீட்டில் இருந்த படியே பணிபுரியும் போது மேலாண்மை தகவல் அமைப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை போன்றவற்றை மேம்பாடுகள் மற்றும் சீரமைப்புகளுடன் செயல்படுத்தும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தீவிரமாக கண்காணிக்க இருக்கின்றது.

வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் முறையில் மார்க்கெட்டிங், கஷ்டமர் ரிலேஷன்சிப் மேனேஜ்மெண்ட், சோஷியல் மீடியா மேனேஜ்மெண்ட், செட்டில்மெண்ட் அண்ட் ரிகன்ஷிலேஷன்ஸ், கம்ப்லைண்ட் மேனேஜ்மெண்ட் அப்ளிகேஷன்ஸ் போன்ற பணிகள் மட்டும் வழங்கப்படும் என்றும், இதனால் பணியாளர் உற்பத்தி பல மடங்கு அதிகரிக்கும் என்றும் எஸ்பிஐ தரப்பில் தகவல் தெரிவிக்கின்றது.

எஸ்பிஐ துணை வங்கிகள் இணையும் நிலையில் ஊழியர்களின் அதிகரிப்பால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை போக்க வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்கும் முறையை எஸ்பிஐ அறிமுகப்படுத்துவதாகவும் மூத்த வங்கி அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

SBI launches work from home facility employees...

அடுத்த செய்தி