ஆப்நகரம்

திருப்பூரில் ரூ.570 கோடி பறிமுதல்; உரிமை கோரும் எஸ்பிஐ வங்கி

திருப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.570 கோடி பணத்திற்கு, பொதுத்துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ உரிமை கோரியுள்ளது.

TOI Contributor 14 May 2016, 9:36 pm
திருப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.570 கோடி பணத்திற்கு, பொதுத்துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ உரிமை கோரியுள்ளது.
Samayam Tamil sbi official statement on erroneous confiscation of cash van
திருப்பூரில் ரூ.570 கோடி பறிமுதல்; உரிமை கோரும் எஸ்பிஐ வங்கி


நேற்றிரவு திருப்பூரில் சென்ற 3 லாரிகளை தேர்தல் அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில், பிடித்து விசாரித்தனர். அப்போது லாரிகளில் இருந்த சிலர் தங்களை ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த போலீசார் என்றும், எஸ்பிஐ வங்கி சார்பாக, பணத்தை எடுத்துச் செல்கிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

எனினும், அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால், 3 லாரிகளிலும் இருந்த ரூ.570 கோடி பணத்தை, தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியல் கட்சிகளுக்கு இதில் தொடர்புள்ளதா என்றும் சந்தேகம் எழுப்பப்பட்டது.

ஆனால், தற்போது எஸ்பிஐ வங்கி, இப்பணத்திற்கு உரிமை கோரியுள்ளது. இதுதொடர்பாக, சென்னை, கோவை மற்றும் திருப்பூரில் உள்ள எஸ்பிஐ அதிகாரிகள் தேர்தல் அதிகாரிகளிடம் நேரில் சென்று, உரிய விளக்கம் அளித்துள்ளனர். மேலும், ஆவணங்களையும் சமர்பித்துள்ளனர்.

ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன், விசாகப்பட்டிணத்தில் செயல்படும் எஸ்பிஐ வங்கிக் கிளைகளில் ஏற்பட்டுள்ள பணப்பற்றாக்குறையை சமாளிக்கும் விதமாக, ரூ.570 கோடி பணத்தை, கோவை பிராந்திய எஸ்பிஐ அலுவலகத்தில் இருந்து, ஆந்திர போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்வதாகவும், அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

இதையடுத்து, ஓரிரு நாளில் இந்த பணம் எஸ்பிஐ வசம் ஒப்படைக்கப்படும் என, தெரிகிறது. இதன்மூலமாக, பெரும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி