ஆப்நகரம்

விண்வெளியில் இருந்து மர்ம ரேடியோ சிக்னல்: உறுதிபடுத்திய விஞ்ஞானிகள்

விண்வெளி எப்போதுமே விஞ்ஞானிகளுக்கு ஒரு புரியாத புதிராக தான் இருக்கும். இந்த பிரபஞ்சத்தில் நாம் தனியாக இல்லை என்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன என்று கூறினால் அது நம் நெஞ்சை உறைய வைக்கும் விஷயமாக இருக்கும்.

MensXP Team 7 Apr 2017, 2:51 pm
விண்வெளி எப்போதுமே விஞ்ஞானிகளுக்கு ஒரு புரியாத புதிராக தான் இருக்கும். இந்த பிரபஞ்சத்தில் நாம் தனியாக இல்லை என்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன என்று கூறினால் அது நம் நெஞ்சை உறைய வைக்கும் விஷயமாக இருக்கும்.
Samayam Tamil scientists confirm that earth has been receiving mysterious radio signals from space
விண்வெளியில் இருந்து மர்ம ரேடியோ சிக்னல்: உறுதிபடுத்திய விஞ்ஞானிகள்


ஆம், இந்த பிரபஞ்சத்தில் நாம் தனியாக இல்லை. அதனை உறுதிபடுத்தும் விதமாக, விண்வெளியில் இருந்து மர்ம ரேடியோ சிக்னல் ஒன்று பூமிக்கு வருகிறது. பல ஆண்டுகள் ஆய்வுக்கு பின்னர், இதனை விஞ்ஞானிகள் உறுதி படுத்தியுள்ளனர்.

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர், மர்ம ரேடியோ சிக்னல் ஒன்று பூமிக்கு வந்துள்ளது.மோலாங்லா ரரேடியோ டெலஸ்கோப் மூலம் இந்த சிக்னல் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், இந்த மர்ம சிக்னலானது பூமியின் பகுதிகளில் இருந்து வருகிறதா? இல்லை வேறு எங்கேனும் இருந்து வருகிறதா? என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். சுமார் 10 ஆண்டுகள் அந்த மர்ம சிக்னலானது ஆய்வுகுட்படுத்தப்பட்டது.

இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு பின்னர், பூமியில் இருந்து அந்த சிக்னல் வரவில்லை, விண்வெளியில் இருந்து தான் அந்த சிக்னல் வருகிறது என உறுதி படுத்தியுள்ள விஞ்ஞானிகள், எந்த இடத்தில் இருந்து அந்த சிக்னல் வருகிறது என உறுதிபடுத்தவில்லை. மேலும், பூமியின் எந்த சிக்னல்களுடன் ஒப்பிட்டாலும், இந்த சிக்னல்கள் பில்லியன் மடங்கு பிரகாசமானவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏலியன் சார்ந்த ஆய்வுகள் உலகில் பல காலமாக நடந்து கொண்டுள்ள நிலையில், உண்மையில் ஏலியன்கள் உள்ளனவா இல்லையா என நம்மில் பலருக்கும் சந்தேகம் இருக்கும். ஆனால், இந்த சிக்னல்கள் ஏலியன்கள் இருப்பதற்கான சந்தேகத்தை உறுதி படுத்தும் விதமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Scientists Confirm That Earth Has Been Receiving Mysterious Radio Signals From Space

அடுத்த செய்தி