ஆப்நகரம்

ஓட்டு போட்டால், சினிமா டிக்கெட் இலவசம்!

நாளை நடைபெறும் வாக்குப் பதிவில் பங்கேற்கும் வாக்காளர்களுக்கு, சினிமா டிக்கெட் இலவசமாக வழங்கப்படும் என, சென்னையில் உள்ள முன்னணி தியேட்டர்கள் அறிவித்துள்ளன.

TNN 15 May 2016, 9:28 pm
நாளை நடைபெறும் வாக்குப் பதிவில் பங்கேற்கும் வாக்காளர்களுக்கு, சினிமா டிக்கெட் இலவசமாக வழங்கப்படும் என, சென்னையில் உள்ள முன்னணி தியேட்டர்கள் அறிவித்துள்ளன.
Samayam Tamil show your inked finger and get a free movie ticket
ஓட்டு போட்டால், சினிமா டிக்கெட் இலவசம்!


ஓட்டு போடுவது பற்றி வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த விநோத அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ஏஜிஎஸ் சினிமாஸ் தியேட்டர் நிறுவனத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், தமிழகத்தில் 100% வாக்குப் பதிவு எட்டப்பட வேண்டும் என்றும், வாக்காளர்கள் ஓட்டுப் போட்டதற்கான அடையாளமாக, மை வைத்த விரலை காட்டினால், இலவச சினிமா டிக்கெட் விநியோகிப்போம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, இண்டர் கான்டினென்டல் சென்னை மகாபலிபுரம் ரிசார்ட்டில், ஓட்டுப் போடும் வாக்காளர்களுக்கு, ஒரு நாள் தங்குவதற்கான சலுகைக் கட்டணம் இலவசம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி