ஆப்நகரம்

உலகையே உலுக்கிய ஒரு எழுத்து!

இன்டர்நெட் உலகையே ஒரே ஒரு எழுத்து உலுக்கிய சம்பவம் அண்மையில் அரங்கேறியிருக்கிறது.

TNN 3 Mar 2017, 4:52 pm
இன்டர்நெட் உலகையே ஒரே ஒரு எழுத்து உலுக்கிய சம்பவம் அண்மையில் அரங்கேறியிருக்கிறது.
Samayam Tamil single typo turned some of biggest websites down
உலகையே உலுக்கிய ஒரு எழுத்து!


அமேசான் வெப் சர்வீசஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஒரே ஒரு எழுத்து இன்டர்நெட் உலகையே ஆட்டிப்படைத்திருப்பது தெரியவந்திருக்கிறது.

அமேசான் வெப் சர்வீசஸ் சர்வரில் பணி புரியும் ஊழியர் ஒருவர் ஒரு எழுத்தை தவறாக டைப் செய்திருக்கிறார். இதனால், பல சர்வர்களின் இயக்கம் முடங்கியது. இந்த சர்வர் முடக்கத்தினால், உலகின் முன்னணி இணையதளங்கள் பல ஸ்தம்பித்தன.

Quora, AOL, and ESPN போன்ற பல பிரபலமான இணையதளங்கள் இந்த ஒரு எழுத்து தவறிய பிழையால் கடுமையாக பாதிக்கப்பட்டன என்று அமேசான் வெப் சர்வீசஸ் கூறியுள்ளது. இதுபோன்ற, சிறு தவறுகளைத் தானாகவே சரிசெய்யும் அம்சம் அமேசானிடம் இல்லை என்பதால் இந்த பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி