ஆப்நகரம்

ஹெல்மெட் அணிந்தால் தான் இயங்கும் பைக் : தமிழக மாணவியின் புதிய கண்டுபிடிப்பு

ஹெல்மெட் அணிந்தால் தான் பைக் ஸ்டார் ஆகும் தொழில்நுடபத்தை வேலூர் மாணவி கண்டுபிடித்துள்ளார்.

TNN 11 Sep 2017, 4:18 pm
வேலூர் : ஹெல்மெட் அணிந்தால் தான் பைக் ஸ்டார் ஆகும் தொழில்நுடபத்தை வேலூர் மாணவி கண்டுபிடித்துள்ளார்.
Samayam Tamil smart motorcycle helmet innovated by govt school student
ஹெல்மெட் அணிந்தால் தான் இயங்கும் பைக் : தமிழக மாணவியின் புதிய கண்டுபிடிப்பு


வேலூர் மாவட்டம், அரக்கோணத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் ஆர். பவித்ரா என்ற மாணவி இதை கண்டுபிடித்துள்ளார்.

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை இயக்கி ஏற்படும் விபத்துக்களை குறைக்கும் விதமாக இம்மாணவியின் புதிய கண்டுபிடிப்பு அமைந்துள்ளது.

இவர் கண்டுபிடித்துள்ள ஹெல்மெட் அணிந்தால் தான் பைக் ஸ்டார்ட் ஆகும். கழற்றினால் பைக் தானாக நின்றுவிடும். இதற்கு இவர் ஹெல்மெட்டுடன் ஒரு சிறிய பேட்டரியை இணைத்து இதை செய்துள்ளார். அதே போல, இந்த ஹெல்மெட்டில் வேகக் கட்டுப்பாடு கூட சாத்தியமே. நாம் நிர்ணயிக்கும் வேகத்தை விட அதிகமாக செல்லும் பட்சத்தில் வேகம் தானாக கட்டுப்படும் விதமாக உருவாக்கியுள்ளார்.

இதற்கு தனியாக பேட்டரி தேவையில்லை, வாகனத்திற்கு ஏற்கனவே உள்ள பேட்டரியே போதும் என தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து வித இருசக்கர வாகனத்திலும் இந்த ஹெல்மெட் பயன்படுத்த இயலும் என தெரிவித்துள்ளார்.



இவரின் கண்டுபிடிப்பை, வேலூர் மாவட்ட ஆட்சியர் ராமனிடம் காட்டி, விளக்கம் அளித்துள்ளார். இது போன்ற சிறப்பான பல தொழில் நுடபங்களை கண்டுபிடிக்க வேண்டும் என கலெக்டர் பாராட்டியுள்ளார்.

அடுத்த செய்தி