ஆப்நகரம்

ஸ்மார்ட்ஃபோன் அடிமையா நீங்கள்? இதைப் படியுங்கள்…

ஸ்மார்ட்ஃபோனுக்கு அடிமையாக இருப்பதால், பலவித பிரச்னைகள் ஏற்படுவதாக, தெரியவந்துள்ளது.

TNN 13 Apr 2017, 9:39 pm
ஸ்மார்ட்ஃபோனுக்கு அடிமையாக இருப்பதால், பலவித பிரச்னைகள் ஏற்படுவதாக, தெரியவந்துள்ளது.
Samayam Tamil smartphone addiction leads to personal social workplace problems study
ஸ்மார்ட்ஃபோன் அடிமையா நீங்கள்? இதைப் படியுங்கள்…


இதுகுறித்து அமெரிக்காவின் பிங்கம்டான் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் ஆய்வு நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளனர். அதில், இன்றைய நவீன உலகில் ஸ்மார்ட்ஃபோன், மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், ஸ்மார்ட்ஃபோனுக்கு அடிமையாக இருப்பதால் பலவித பிரச்னைகளும் ஏற்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

இதில், தனிப்பட்ட உடல்நலம் தொடங்கி, சமூக சீர்கேடுகள், அலுவலக வேலை பாதிப்பு என்பன முக்கியமானவை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துவதால், நமது நரம்புகள் கிளர்ச்சியடைந்து, டோபமைன் வேதிப்பொருள் அதிகளவு சுரக்கிறது. இதனால், நமக்கு ஒருவித மனக்கிளர்ச்சியும், அடிமைத்தனமும் அதிகரிக்கிறது.

இதையடுத்து, ஸ்மார்ட்ஃபோனை தொடர்ந்து உபயோகப்படுத்த நேரிடுகிறது. இறுதியாக, மன அழுத்தம், சமூகத்தில் தனிமை, சமூகம் மீது கோபம், அக்கறையின்மை, தாழ்வு மனப்பான்மை, குடும்ப உறவுகளில் விரிசல், பணிகளில் பாதிப்பு, மாணவர்கள் என்றால் கல்வியில் பாதிப்பு எனப் பலவகையில் ஸ்மார்ட்ஃபோன் பிரச்னை ஏற்படுத்துகிறது.

தொழில்நுட்பத்திற்கு நாம் அடிமையாக இருப்பதை தவிர்த்தால் மட்டுமே இந்த பிரச்னை சீராகும் என்று, அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Excessive smartphone use may lead to personal, social and workplace problems, according to a new study which found that women are especially susceptible to addiction.

அடுத்த செய்தி