ஆப்நகரம்

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை மீட்பு-ஆச்சரிய வீடியோ..!

ரஷ்யாவில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை மீட்கப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

TNN 3 Nov 2016, 10:48 am
ரஷ்யாவில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை மீட்கப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Samayam Tamil  2 year old girl fell into a bore wellrescued by 17 years old girl
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை மீட்பு-ஆச்சரிய வீடியோ..!


ரஷ்யாவில் 2 வயது குழந்தை ஒன்று எதிர்பாராதவிதமாக மூடப்படாத ஆழ்துளைக் கிணறு ஒன்றில் தவறி விழுந்தது.இதனை தொடர்ந்து குழந்தை மீட்பதற்காக களத்தில் இறங்கிய மீட்புப்படையினர்,ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் குழி தோண்டி அந்த குழந்தையை மீட்கலாம் என முடிவெடுத்தனர்.

ஆனால் அந்த முயற்சி கைகூடாததை அடுத்து,ஆழ்துளைக் கிணறுக்குள் கயிற்றால் கட்டப்பட்ட 17 வயது சிறுமியை உள்ளே இறக்கி,அந்த சிறுமி மூலம் குழந்தையை காப்பாற்ற முடிவு செய்யப்பட்டது.முதல் முறை ஆள்துளைக் கிணற்றுக்குள் சிறுமி இறக்கப்பட்ட சில நிமிடங்களில் மூச்சுத்திணறல் காரணமாக,அந்த சிறுமி மேலே கொண்டு வரப்பட்டார்.

பின்னர் மீண்டும் அந்த சிறுமி ஆழ்துளைக் கிணற்றுக்குள் இறக்கப்பட்டார்.இந்த முறை வெற்றிகரமாக அந்த சிறுமி,குழந்தையை மீட்டார்.இந்த காட்சிகள் அனைத்தும் அடங்கிய வீடியோ பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.



2 year old girl fell into a bore well,rescued by 17 years old girl

அடுத்த செய்தி