ஆப்நகரம்

மருமகளுடன் சண்டை:தற்கொலை செய்து கொண்டதை வீடியோவாக எடுத்த மாமனார்..!

மருமகளுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக மனமுடைந்த மாமனார்,தான் தற்கொலை செய்து கொள்வதை வீடியோவாக படமெடுத்துள்ளார்.

TNN 25 Dec 2016, 7:05 pm
மருமகளுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக மனமுடைந்த மாமனார்,தான் தற்கொலை செய்து கொள்வதை வீடியோவாக படமெடுத்துள்ளார்.
Samayam Tamil  fight with daughter in lawfather in law hanging himself and video it
மருமகளுடன் சண்டை:தற்கொலை செய்து கொண்டதை வீடியோவாக எடுத்த மாமனார்..!


மகராஷ்டிர மாநிலம் தானேவைச் சேர்ந்த பாபு ஷேக் என்பவர் தனது குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறார்.அவரது மகனுக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது.திருமண நாள் முதலே மருமகளுக்கும்,ஷேக்கின் குடும்பத்தினருக்கும் தொடர்ந்து சண்டை நடந்து வந்துள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் ஷேக்குடன் சண்டை போட்ட அவரது மருமகள் கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.இதனால் மனமுடைந்த ஷேக் இது குறித்து தனது குடும்பத்தினரிடம் புலம்பி வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று முன் தினம்,செல்போனில் எப்படி வீடியோ எடுக்க வேண்டும் என தனது மகனிடம் கேட்டு தெரிந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று ஷேக்கின் வீடு உள்புறமாக தாழிடப்பட்டிருந்துள்ளது.வேலை முடிந்து வீட்டிற்கு வந்த ஷேக்கின் மகன்,பல முறை வீட்டை தட்டியும் ஷேக் கதவை திறக்கவில்லை.இதனால் சந்தேகமடைந்த அவர்,கதவை உடைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றுள்ளார்.அப்போது வீட்டில் தூக்கு மாட்டிய நிலையில் ஷேக் பிணமாக தொங்கியுள்ளார்.

மேலும் ஷேக்கின் செல்போன் வீடியோ எடுக்கப்பட்ட நிலையிலேயே கிடந்துள்ளது.அதில் தான் தற்கொலை செய்து கொள்வதை,ஷேக் முழுவதும் வீடியோவாக எடுத்துள்ளார்.மேலும் தனது மருமகளும்,மருமகளும் அண்ணனும் தன் நடத்தை குறித்து மிகவும் தவறாக பேசி அசிங்கப்படுத்தியதாகவும்,இதனால் மனமுடைந்து இந்த தற்கொலை முடிவை எடுத்ததாகவும் செல்போனில் ஷேக் பேசிய குரல் பதிவு ஒன்றும் கிடைத்தது.

இதனை தொடர்ந்து தனது மனைவி,மாமனார் மற்றும் மனைவியின் சகோதரர் ஆகியோர் மீது ஷேக் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

Fight with daughter-in-law;father-in-law hanging himself and video it.

அடுத்த செய்தி