ஆப்நகரம்

அறுந்து விழுந்த பிரம்மாண்ட ராட்டினம்; 10 வயது சிறுமி பலியான சோகம்!

பிரம்மாண்ட ராட்டினம் அறுந்ததில் சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.

Samayam Tamil 28 May 2018, 11:43 am
அனந்தபூர்: பிரம்மாண்ட ராட்டினம் அறுந்ததில் சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.
Samayam Tamil Giant Wheel
பிரம்மாண்ட ராட்டினம்


ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் பொருட்காட்சி நடைபெற்றது. அங்கு ஏராளமான குழந்தைகள், பெண்கள் சென்றனர். இந்நிலையில் பிரம்மாண்ட மின்சார ராட்டினம் ஒன்றில் பொதுமக்கள் ஆர்வத்துடன் ஏறி அமர்ந்தனர்.

ராட்டினம் சுழன்று கொண்டிருந்த போது, திடீரென ஒரு பெட்டி மட்டும் கழன்று விழுந்தது. இதில் அம்ருதா என்ற 10 வயது சிறுமி உயிரிழந்தார். காயமடைந்த 6 பேர் அனந்தபூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து ஆபரேட்டரை அப்பகுதி மக்கள் அடித்து, காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் ஆபரேட்டர் குடிபோதையில் இருந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

ராட்டினம் சுழன்று கொண்டிருக்கும் போது, போல்ட் ஒன்று கழன்று விழும் நிலையில் இருந்ததுள்ளது. இதைக் கண்ட மக்கள், உடனே ஆபரேட்டரிடம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் குடிபோதையில் இருந்த அவர், குறைபாட்டைக் கண்டுகொள்ளவில்லை என்று குற்றம்சாட்டினர்.

10 year old killed in giant wheel crash at Andhra Pradesh.

அடுத்த செய்தி